வாடகை மாணவர் விடுதிகளால் அரசுக்கு வருவாய் இழப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2013

வாடகை மாணவர் விடுதிகளால் அரசுக்கு வருவாய் இழப்பு.


பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக அமைக்க வேண்டிய 68 விடுதிகளுக்கு இதுவரை அரசாணை வெளியிடப்படாமல் இருப்பதால் ஆண்டுக்கு
பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்காக அந்த துறையின் கீழ் விடுதிகள் உள்ளன. இதுதவிர, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை, சிறுபான்மை நலத் துறை கீழ் சார்பிலும் விடுதிகள் உள்ளன. இவ்விடுதிகளில் 80,000 பேர் தங்கியுள்ளனர்.ஆனால், இவற்றில் 1,006 விடுதிகள் மட்டுமே நலத்துறையின் சொந்த கட்டடம். மற்ற விடுதிகள் வாடகை கட்டடங்களில் செயல்படுகின்றன. அனைத்து விடுதிகளும், சொந்தகட்டடத்தில் இயக்க ஏற்பாடு செய்யப்படும் என, இரண்டு ஆண்டுகளுக்கு முன் முதல்வர்ஜெயலலிதா அறிவித்தார்.ஆனால் 220 விடுதிகளுக்கு மட்டுமே அரசாணை வெளியிடப்பட்டு அவற்றின் கட்டுமானப்பணி பல்வேறு நிலைகளில் உள்ளன; முடிவடையவில்லை. இன்னும், 68 மாணவர் விடுதிகள் கட்டுவதற்கான அரசாணை, இன்று வரை வெளியிடப்படவில்லை.இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. 150 மாணவர்கள் தங்கும் வகையில் விடுதி ஒன்றை வாடகைக்கு எடுத்தால் குறைந்தபட்சம் மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய் வாடகையாக அரசு கொடுக்க வேண்டும். சொந்த கட்டடம்அமைய அரசாணை வெளியிட்டாலும் ஒப்பந்தப்புள்ளி கோருவது ஒப்பந்ததாரரை தேர்ந்தெடுப்பது பணிகளை துவக்குவது என, கட்டுமான பணிகளை முடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளாகும்.அரசாணை வெளியிட்ட பின், பணிகளை முடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளாகும் எனில், இதுவரைஅரசாணையே வெளியிடப்படாமல் இருக்கும் பணிகள் துவங்க இன்னும் பல ஆண்டுகளாகும்.தாமதமாகும் ஒவ்வொரு விடுதிக்கும் வாடகையாக மாதம் 15 ஆயிரம் கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் செலவாகிறது. தொடர்ந்து இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க அரசு ஆவன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி