சைனிக் பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2013

சைனிக் பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு.

அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 2014-15ம் ஆண்டுக்கான ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை நடக்கவுள்ளதால் தகுதியான கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராஜேஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: "மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் ஒருங்கிணைந்து சைனிக் உண்டு உறைவிடப்பள்ளியை நடத்துகிறது. இந்திய பாடத்திட்டத்தினை கொண்ட இந்த பள்ளியில் மாணவர்கள் மட்டுமே சேர முடியும்.தமிழகத்தில் உடுமலைபேட்டை அமராவதி நகரில் சைனிக் பள்ளி உள்ளது. இங்கு 2014-15ம் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.2014 ஜூலை 1ம் தேதி அன்று 10 வயது முடிந்தும் 11 வயது முடியாமலும் இருக்கும் மாணவர்கள் மட்டுமே ஆறாம் வகுப்பில் சேர முடியும். 2014 ஜூலை 1ம் தேதி அன்று 13வயது முடிந்தும் 14 வயது முடியாமலும் உள்ள மாணவர்கள் அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் மட்டும் ஒன்பதாம் வகுப்பில் சேரத் தகுதி உண்டு.பெற்றோர்களின் மாத வருமான அடிப்படையில் 50 ஆயிரம் ரூபாய் வரை மாநில மத்திய அரசுகளின் உதவித்தொகை வழங்கப்படும்.விளக்க குறிப்பேடும் விண்ணப்ப படிவமும் பெற விரும்பும் பொதுப்பிரிவு மற்றும் படைத்துறைப் பிரிவினை சார்ந்தவர்கள் 650 ரூபாய்க்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் 500 ரூபாய்க்கும், அமராவதி நகர் பாரத் ஸ்டேட் வங்கியில் பெறத்தக்க வகையில் "முதல்வர் சைனிக் பள்ளி, அமராவதி நகர்" என்ற பெயரில் வரைவோலை எடுத்து, வேண்டுதல் கடிதத்துடன் அனுப்ப வேண்டும்.எந்த வகுப்புக்கு அனுமதிக்க வேண்டும் என்பதையும், எந்த பிரிவை சேர்ந்தவர் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். மேலும் சைனிக் பள்ளியின் இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பமும் விளக்க குறிப்பேடும் வரும் நவம்பர் 31ம் தேதி வரை வழங்கப்படும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை "முதல்வர் சைனிக் பள்ளி, அமராவதி நகர், உடுமலைபேட்டை வட்டம், திருப்பூர் மாவட்டம்- 642102" என்ற முகவரிக்கு வரும் டிசம்பர் 7ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இதற்கான நுழைவுத் தேர்வு 2014 ஜனவரி 5ம் தேதி குறிப்பிட்ட மையங்களில் நடைபெறும். இது குறித்து மேலும் விவரங்கள் அறிய விரும்புவோர் 04252- 256246, 256296 என்ற டெலிஃபோன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.சைனிக் பள்ளிக்கும், தனியார் பயிற்சி மையங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையிலும், மருத்துவம் சோதனையின் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.இப்பள்ளியில் வகுப்பறை, ஆய்வகம், நூலகம், விடுதிகள், உணவகங்கள், இண்டர்நெட், மல்டி மீடியா லேப், தனித்திறன் பயிற்சி, மருத்துவ வசதி, விளையாட்டு மைதானம், விளையாட்டு அரங்கம், நீச்சல், யோகா , அறிவியல் பூங்கா, குதிரேயற்றம் ஆகிய வசதிகள் உள்ளது. இந்த வாய்ப்பினை கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியான மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்."

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி