உங்கள் கைகளில் ஒன்பதாம் வாய்ப்பாடு-எளிய முறையில் மாணவர்களுக்காக... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2013

உங்கள் கைகளில் ஒன்பதாம் வாய்ப்பாடு-எளிய முறையில் மாணவர்களுக்காக...

தங்களுடைய இரு கைகளைப் பயன்படுத்தி ஒன்பதாம் வாய்பாட்டினை மிக சுலபமாக காண முடியும். உங்களது பள்ளி மாணவர்களுக்கு 
சொல்லிக் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தலாம்.
வழிமுறை :
படி 1 :
உங்கள் இரு கைகளையும் விரல்கள் தெரியுமாறு விரித்துக் கொள்ளுங்கள்.
படி 2 :
இடது கை விரலில் இருந்துதான் 1 முதல் 10 வரை எண்ணத் தொடங்க வேண்டும்.
படி 3 :
எந்த எண்ணை ஒன்பதால் பெருக்க வேண்டுமோ அந்த எண் கொண்ட விரலை மடக்கிக் கொள்ளவும்.
படி 4 :
பின்பு இடது பக்கத்தில் மீதமுள்ள கை விரல்களையும் வலது பக்கத்து மீதமுள்ள விரல்களையும் சேர்த்தால் அதுதான் விடை.
விளக்கம் :
உங்கள் இடது கையில் 3 வது விரலை மடக்க வேண்டும். (ஏனென்றால் 3 ஆல் பெருக்குவதால்).பின்னர் 3 ஆவது விரலுக்கு முன் மீதமுள்ள விரல்களின் என்னிக்கை மொத்தம் 2 [2 ஆனது விடையின் முதல் பாதி]. 3 வது விரலுக்குப் பின் உள்ள விரல்களின் என்னிக்கை மொத்தம் 7 [7 ஆனது விடையின் இரண்டாம் பாதி], எனவே 3 X 9 = 27 விடையாகும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி