அனைத்து ஆசிரியர் சங்கங்களின் மாநில தலைமைகளும் ஒன்று சேர்ந்து முதலில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேச முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2013

அனைத்து ஆசிரியர் சங்கங்களின் மாநில தலைமைகளும் ஒன்று சேர்ந்து முதலில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேச முடிவு.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் 20/10/13 அன்று நாமக்கல் நகரில் நடைபெற்றது. பொதுக்குழுவில் இன்றைய இடைநிலை ஆசிரியர்களின்
வாழ்வாதார பிரச்சினையாக உள்ள தர ஊதியம் 4200 ஆக மாற்ற கீழ்க்கண்டநடவடிக்கைகளில் செய்வது என முடிவாற்றப்பட்டது.
முதலில், அனைத்து ஆசிரியர் சங்கங்களின் மாநில தலைமைகளும் ஒன்று சேர்ந்து முதலில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து
1.இடைநிலை ஆசிரியர்களின் தர ஊதியத்தை 4200 என மாற்றம் செய்து,ஊதியக்கட்டு 1லிருந்து 2க்கு மாற்றம் செய்யக்கோருவது
2.தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துபழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும்.
ஆகிய இரண்டு முக்கிய கோரிக்கைகள் குறித்து கோரிக்கை வைப்பது.அதற்குப்பிறகும் அதாவது முதல்வரை சந்தித்து முறையிட்ட பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் உடனடியாக அனைத்து சங்கங்களும் இணைந்து போராட்டகளத்தில் குதிப்பது என முடிவாற்றப்பட்டது.
மேலும்முக்கிய நிகழ்வாக:
பொதுக்குழு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுதே நமது பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி Ex.M.L.C,அவர்கள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மூத்த தலைவரான திரு.ஈஸ்வரன் அவர்களுடனும் தமிழ்நாடு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில செயலர் திரு மணிவாசகம் அவர்களுடனும் தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு மேற்கண்ட இந்த நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினார்.அவர்களும் இம்முடிவு குறித்து மகிழ்ச்சியுடன் இசைவு தெரிவித்தனர்.தற்போது இதனைத்தொடர்ந்து முழு வீச்சில் மற்ற சங்கங்களின் மாநில தலைமைகளுடன் இது குறித்து பேசுவதற்கான முயற்சிகள் பொதுச்செயலர் திருமிகு முத்துசாமி அவர்களால் நடைபெற்று வருகின்றன.
தகவல்:
திரு.க.செல்வராஜ்,
மாநில துணைச்செயலர்,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி