TRB PG TAMIL :மறுதேர்வு நடத்தும் உத்தரவுக்கு உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2013

TRB PG TAMIL :மறுதேர்வு நடத்தும் உத்தரவுக்கு உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை.


முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்தும் உத்தரவுக்கு உயர் நீதிமன்றத்தின்இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு
இடைக்காலத் தடை விதித்துள்ளது.முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்துள்ளனர்.அதன் விவரம்:

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியருக்கான போட்டித்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் 31 ஆயிரத்து 983 பேர் எழுதியுள்ளனர்.ஏ,பி,சி,டி என நான்கு பிரிவாக வழங்கப்பட்ட வினாத் தாளில் பி வரிசையில்8,002 பேர் எழுதியுள்ளனர். நான்கு பிரிவு வினாத்தாளும் ஒன்றே,கேள்விகளின் வரிசையில் மற்றும் மாற்றம் இருக்கும். இருப்பினும்,பி வரிசை வினாத்தாளில் 54 இடங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளன. அதுவும்ங் என்ற எழுத்து து எனவும், ழ் என்பது துணைக் காலாகவும் அச்சிடப்பட்டுள்ளது. தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண்ணை எடுத்தவர், பி வரிசை வினாத்தாளில்தான் எழுதியிருக்கிறார். அதோடு, அதிக மதிப்பெண் எடுத்த முதல் 10பேரில் 6 பேர் பி வரிசை வினாத்தாளில் எழுதியவர்கள். ஆனால், இரு தேர்வர்கள்மட்டுமே எழுத்துப் பிழையான 21 கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கக்கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால்,பிழையான 40 கேள்விகளுக்கும் முழு மதிப்பெண்வழங்குவது அல்லது பிழையான கேள்விகளை நீக்கிவிட்டு 110மதிப்பெண்களுக்கு மட்டும் மதிப்பீடு செய்வது என இரு பரிந்துரைகள்முன்வைக்கப்பட்டன. இருப்பினும், இதை தனி நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ், ஆசிரியர் தகுதித்தேர்வு அவசியமாகிறது. தகுதித் தேர்வின் மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்யநடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில், மறுதேர்வு நடத்துவதால்இந்தப் பணி மேலும் தாமதமாகும். மேலும், 31 ஆயிரத்து 983 பேர் எழுதிய தமிழ்ப் பாடத்தேர்வை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தேர்வு நடத்துவது தேவையற்ற பெரும்செலவினத்தை ஏற்படுத்தும். அதோடு, முந்தைய தேர்வை நன்றாக எழுதியவர்கள், மறுதேர்வில்அதே அளவுக்கு சிறப்பாகச் செய்ய முடியாமல் போகலாம். மறுதேர்வை சிலதேர்வர்கள் எழுத முடியாமலும் போகலாம். இதனால் அவர்கள் வேலைவாய்ப்பை இழக்கநேரிடும். ஆகவே,மறுதேர்வு உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுவை விசாரித்த எம்.ஜெய்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர்அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதித்தது. இந்தவழக்கு விசாரணை வரும் நவம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. hats of u sir.wat a quick updates compare wit other websites.thank u sir

    ReplyDelete
  2. அனைவருக்கும் 40 மதிப்பெண் வழங்கப்படுமா? பி வரிசை தேர்வர்களூக்கு. மட்டுமே வழங்கப் படுமா?

    ReplyDelete
  3. PG TAMIL CANDIDATES EXPECTATIONS:

    1.Evaluating for 110 with addition of grace 40 marks
    2.Evaluating for 110 by deleting(star) 40 error qns
    3`Evaluating for 110 by deleting(star) 40 error qns & converting into 150

    As per the appeal made by TN GOVT for Interim stay for re exam, We heard that above 3 mode of evaluation shall b done for PG Tamil candidates by TRB or BY ANY OTHER NEW MODE .

    This will affect the mark scorers. Only 5 to 8 0r 10 qns are more critical to understand in error B series PG Tamil qn. If that critical qns alone starred & remaining 140 or 142 evaluated for B series and for that grace marks shall b given or converted to 150 & if the rest A C D series are evaluated normally for 150 - both B series & A C D series hardworkers didnt get affected.

    Claiming full marks for 47 or 54 error qns OR conducting re exam is mere injustice. But claiming for the error qns that truely affects the POST GRADUATE B SERIES TAMIL CANDIDATE nearby 5 to 10 which contains 2-3 printing errors in same qn will b acceptable.

    Anyway we all believe that, Respected GOVT OF TAMILNADU & TRB will soon found the most suitable method of evaluation without wasting the hardwork of all series candidates & finish the PG Tamil issue soon & appoint along with awaiting other subject PG candidates.

    Once again we r thankful to TN GOVT & TRB for getting Interim stay for PG TAM Re exam at Madurai High Court since hardwork of the candidates r considered most.

    ReplyDelete

  4. PG TAMIL INTERIM STAY FOR RE EXAM BY MADURAI HIGH COURT - CASE DETAILS OF WRIT APPEAL(MD)1089 of 2013 AS PER MADURAI HIGH COURT WEBSITE http://courtnic.nic.in/madurai/content.asp




    MADRAS HIGH COURT - MADURAI BENCH
    CASE STATUS INFORMATION SYSTEM

    Case Status : Pending

    Status of WRIT APPEAL(MD) 1089 of 2013

    THE STATE OF TAMIL NADU, Vs. J. ANTONY CLARE,

    Pet's Adv. : M/S.SPL GOVT PLEADER

    Res's Adv. : M/S.T.LAJAPATHI ROY

    Last Listed On : Not Available

    Next Date of Hearing : No Date Mentioned

    Category : NO CATEGORY MENTIONED



    CONNECTED APPLICATION (S)


    MP(MD) 1 of 2013
    CONNECTED MATTER (S)


    No Connected Cases.

    Case Updated on: Monday, October 28, 2013

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி