UGC சார்பில் நடத்தப்படும் இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தகுதித் தேர்வை (ஜெ ஆர் எப் மற்றும் லெக்சர்ஷிப் ) எழுத விரும்பும் மாணவர்கள் வரும் 09-11-2013 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 27, 2013

UGC சார்பில் நடத்தப்படும் இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தகுதித் தேர்வை (ஜெ ஆர் எப் மற்றும் லெக்சர்ஷிப் ) எழுத விரும்பும் மாணவர்கள் வரும் 09-11-2013 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இது குறித்து பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் ராம்கணேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

UGC சார்பில் நடத்தப்படும் இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தகுதித்தேர்வு
வரும் டிசம்பர் 29 (29-12-2013) ம்தேதி நடக்கிறது. இந்தக் கல்வியாண்டில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தேர்வு நடத்தும் மையமாக செயல்படுகிறது.இத்தேர்வில் கலந்து கொள்ள முது நிலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் இறுதியாண்டில் பயிலும் மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.www.ugcnetonline.in தமிழ் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்கள், கலைப்பிரிவு பாடங்கள், கணினி அறிவியல் , மின்னணுவியல், சுற்றுசூழல் அறிவியல் உள்ளிட்ட 78 பாடங்களில் நடைபெறும் இத்தேர்வினை எழுதுவதற்கு, பொதுப்பிரிவு மாணவர்கள் 55 சதவீதமும்,SC, ST பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 50 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இத்தேர்வினை எழுத விரும்பும் மாணவர்கள் www.ugcnetonline.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து ,விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்னப்பத்தில் புகைப்படத்தில் சான்றொப்பத்துடன், வருகைச்சீட்டு, சாதிச்சான்றிதழ் அல்லதுமாற்றுத்திறனாளிக்கான சான்றிதழ்களுடன் யுஜிசிக்கான செலான் நகல் ஆகியவற்றுடன், முது நிலைப் படிப்பிற்கான சான்றிதழ்களுடன், ஒருங்கிணைப்பாளர், பல்கலைக் கழக நிதி நல்கைக்குழு நடத்தும் விரிவுரையாளர்க்கானத் தேர்வு, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி - 620024 என்ற முகவரிக்கு வரும் 09-11-2013 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.பொது பிரிவினர் ரூ.450/-, ஓ.பி.சி வகுப்பினர் ரூ.225/-, SC, ST பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகல் ரூ.110/- தேர்வுக்கட்டணமாக செலுத்தப்பட வேண்டும். மாணவர்கல் வரும் 30-10-2013க்குள் ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரடியாக டில்லிக்கு அனுப்பக் கூடாது. UGC ல் பதிவு செய்யப்படாத மற்றும் முழுமையற்ற விண்ணப்பங்கள்ஏற்றுக் கொள்ளப்படாது.அனுமதிச்சீட்டு மற்றும் செலான் நகல் ஆகியவற்றை தேர்வு நாளன்று தேர்வறைக்குக் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி