100 கோடி விடைத்தாள்கள் வீணாவது தவிர்ப்பு - அரையாண்டு தேர்வுக்கு பயன்பாடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 23, 2013

100 கோடி விடைத்தாள்கள் வீணாவது தவிர்ப்பு - அரையாண்டு தேர்வுக்கு பயன்பாடு.


தமிழகத்தில் வரும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் புகைப்படம், பார் கோடு அச்சிடப்பட்ட 38 பக்கங்கள் அடங்கிய விடைத்தாள்கள் வழங்கப்படவுள்ளன. இதனால், டம்மி எண் போடும் பணியும்
அதற்கான நேரமும் தவிர்க்கப்படும். மேலும், பேப்பர் சேஸிங் உள்ளிட்ட குளறுபடிகளையும் தடுக்கலாம். கடந்த அக்டோபர் மாதம் நடந்த தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வில் இம்மாதிரியான விடைத்தாள்கள் அளிக்கப்பட்டு முன்னோட்டம் பார்க்கப்பட்டது.

இந்த புதுத் திட்டத்தின்படியே வரவுள்ள பொதுத்தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.இதனால் பழைய தேர்வு முறைக்காக இந்த ஆண்டின் துவக்கத்திலேயே தயாரித்து வைக்கப்பட்டிருந்த விடைத் தாள்கள் பயன்படுத்தப்படாமலே வீணாகும் நிலை ஏற்பட்டது. அவற்றை என்ன செய்வது என்று கல்வித் துறை அதிகாரிகள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2அரையாண்டுத் தேர்வுகளில் அனைத்து பாட தேர்வுகளுக்கும் இந்த விடைத்தாள்களை விநியோகிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி எழுதும் சுமார் 20 லட்சம் மாணவர்களுக்கு ஏற்கெனவே தயாரிக்கப்பட்டிருந்த விடைத்தாள்கள் அளிக்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 100 கோடி விடைத்தாள்கள் வீணாவது தவிர்க்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி