133 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 23, 2013

133 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி


சிவகங்கை மாவட்ட பள்ளி கல்வித்துறை மூலம் ஆசிரியர் தினவிழா, காரைக்குடியில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் வரவேற்றார். கலெக்டர் ராஜாராமன் தலைமை வகித்து பேசியதாவது:

பொருளாதாரம் மேம்பட மனித வளம் அவசியம். அவற்றை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். 2013-14-ம் கல்வியாண்டில், 133 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது. இதன் மூலம் 1995 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். மேல்நிலை கல்வியில், இடைநிற்றலை மாணவர்கள் தவிர்க்கும் வகையில், மாநில அளவில் கடந்த 3 ஆண்டுகளில், ரூ.1055 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.2013-14ம் கல்வி ஆண்டில், சீருடைக்காக 353 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 53.5 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

அரசு செலவு செய்யும் மாணவர்களுக்கு சென்றடையும் மிகப்பெரிய பொறுப்பில் ஆசிரியர்கள் உள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி, இடைநிலை கல்வி திட்டம், நபார்டு மூலம் 9.62 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கழிப்பறை, கட்டட வசதி ஏற்படுத்தப்பட்டள்ளது. உலகம்பட்டியில் விடுதி கட்ட ரூ.2.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, என்றார்.நிகழ்ச்சியில், அழகப்பா பல்கலை துணைவேந்தர் பணிக்குழு தலைவர் கலியமூர்த்தி, பதிவாளர் மாணிக்கவாசகம், எஸ்.பி., அஸ்வின் கோட்னீஷ், மாவட்ட கல்வி அலுவலர் மனோகரன், தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட கல்வி அலுவலர் தங்கவேலு பங்கேற்றனர். கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி நன்றி கூறினார்.

2 comments:

  1. angila vazhi palligallil English medium candidates kku munnurimai kodungal muttal arasiyal vathigale tharpothaya suzhalil tamil medium padithavanai kattilum English medium padithavan padikka pogindravanthan athigam athanal vote bank pathikkum

    ReplyDelete
  2. very good comment government itself provide english medium but Tamil medium students only get benefits this is totally idiotic.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி