1947=2014, 67 ஆண்டுகளுக்கு பின் ஒரே மாதிரி காலண்டர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2013

1947=2014, 67 ஆண்டுகளுக்கு பின் ஒரே மாதிரி காலண்டர்.


சில சமயங்களில் எப்போதாவது சில அதிசயங்கள் நிகழும். அப்படிப்பட்ட ஓர் அதிசயம் வருகிற 2014ம் ஆண்டில் நிகழ்கிறது. அதாவது 1947ம் ஆண்டு காலண்டர் போலவே, 2014ம் ஆண்டின்
காலண்டரும் அமைகிறது. 1947ம் ஆண்டு புதன்கிழமை பிறந்தது. அதேபோல் இந்த ஆண்டும் புதன்கிழமைதான் பிறக்கிறது.மேலும் 1947ம் ஆண்டைப் போலவே 2014ம் ஆண்டும் ஒரே மாதிரியான தேதிகளையும், கிழமைகளையும் கொண்டு உள்ளது.இதனால் 2014ம் ஆண்டின் காலண்டரை பார்த்தால், அப்படியே 1947ம் ஆண்டின் காலண்டரை பிரதி எடுத்தது போல் உள்ளது. எனவே, யாரிடமாவது 1947ம் ஆண்டின் காலண்டர் இருந்தால் அதை இப்போது பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய ஆண்டு பிறக்கப்போகிறது என்றாலே, புத்தாண்டு எப்படி இருக்கும்? என்பது பற்றி பல கணிப்புகள் வெளியாகும். அதேபோல் இந்த ஆண்டும் கணிப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. 1947ம் ஆண்டுதான் ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அதேபோல் இந்த ஆண்டும் இந்திய அரசியலில் பெரும் மாற்றம் நிகழக்கூடும் என்று சிலர் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி