நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 25 சதவீதம் பதவி உயர்வு அளிக்க கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2013

நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 25 சதவீதம் பதவி உயர்வு அளிக்க கோரிக்கை.


நேரடி முதுகலை ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும், 50 சதவீதத்தில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கி, பதவி உயர்வு செய்ய வேண்டும்' என,
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்,வலியுறுத்தி உள்ளது. சங்க தலைவர், தியாகராஜன், பள்ளி கல்வி இயக்குனருக்கு அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

தொடக்க கல்வித் துறையின் கீழ், நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியரில், முதுகலை ஆசிரியர் தகுதிவாய்ந்தவர்களுக்கு, கடைசி வரை, பதவி உயர்வே கிடையாது. பள்ளி கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் மட்டும், கல்வி தகுதிக்கு ஏற்ப, பதவி உயர்வு பெறமுடிகிறது. தற்போது, முதுகலை ஆசிரியர் காலி இடங்களில், 50 சதவீதம், பதவி உயர்வு மூலமும், 50 சதவீதம், நேரடி நியமனம் மூலமும் நிரப்பப்படுகின்றன. இதில், நேரடி நியமனத்திற்கான, 50 சதவீத இடங்களில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒதுக்கி, பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

தியாகராஜன் கூறியதாவது: முதுகலை ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள், பட்டதாரி ஆசிரியர் பணிக்கும், தகுதியானவராக இருக்கின்றனர். எனவே, இரு தேர்வுகளிலும், அவர்கள் பங்கேற்கலாம். பட்டதாரி ஆசிரியர், அதிகளவில் தேர்வு செய்யப்படுவதால், அவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது. ஆனால், எங்களுக்கு, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வைத் தவிர, வேறு வாய்ப்பு இல்லை. எனவே, எங்களுக்கு, 25 சதவீதம் பதவி உயர்வு வழங்குவதால், யாருக்கும் பாதிப்பு ஏற்படாது, என்றார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி