54 ஆயிரம் அங்கன்வாடிகளுக்கு ரூ.15 கோடியில் கல்வி உபகரணம் - தமிழக அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2013

54 ஆயிரம் அங்கன்வாடிகளுக்கு ரூ.15 கோடியில் கல்வி உபகரணம் - தமிழக அரசு உத்தரவு


தமிழகத்தில் 15 கோடி ரூபாய் செலவில் 54,439 அங்கன்வாடி மையங்களுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 49,499 பிரதான அங்கன்வாடி மையங்கள்,
4,940 கிளை அங்கன்வாடி மையங்கள்என 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகிறது. இதில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட 2 வயது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் கல்வி கற்கின்றனர். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு விளையாட்டுடன் செயல் வழி கற்றல் முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான மையங்களில் குழந்தைகள் கல்வி, கற்க எவ்வித உபகரணமும் இல்லை.சில மையங்களில் இருந்த உபகரணங்கள் பழுதடைந்து விட்டது. தன்னார்வ அமைப்புகளும் அங்கன்வாடி மையங்களுக்கு போதுமான உதவியை வழங்கவில்லை.இந்நிலையில், தமிழக அரசின்ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் (ஐ.சி.டி.எஸ்) சார்பில் 15 கோடி ரூபாய் செலவில் குழந்தைகள் விளையாட கல்வி, விளையாட்டு உபகரணங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி முதல் அங்கன்வாடி களில் விளையாட்டு, கல்வி உபகரணங்கள் வழங்கப்படும். சுமார் 20 லட்சம் கல்வி, விளை யாட்டு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.இதுபற்றி தமிழக ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘மரத்தில் தயாரிக்கப்பட்ட காலணி, விலங்கு, பறவை, மரம், சதுரம், வட்டம், முக்கோணம், அறுங்கோண வடிவிலான விளையாட்டு பொருட்கள், பிளாஸ்டிக்கில் கட்டிடம் கட்டுவதற்கான பொருட்கள், கதை சொல்லும் வகையிலான பொம்மைகள் அடங்கிய அட்டை, படக்கதை புத்தகம் போன்றவை பெறப்படும். அங்கன்வாடிகளின் தரம் உயர்த்தப்பட்டதால் வரும் ஆண்டில் குழந்தைகளின் சேர்க்கை சதவீதம் 10 முதல் 15 சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்த தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது‘‘ என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி