7-வது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் ஓரிரு வாரங்களில் அமைச்சரவையில்தாக்கல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2013

7-வது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் ஓரிரு வாரங்களில் அமைச்சரவையில்தாக்கல்.


மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை திருத்தம் செய்வதற்காக 7-வது சம்பளகமிஷன் அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தார். எனினும் 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு
முறைப்படி திட்டம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்படவில்லை. இந்நிலையில், 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கான திட்டம் இன்னும் ஓரிரு வாரங்களில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இதற்காக மத்திய நிதியமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அமைச்சரவையின் ஒப்புதலையடுத்து சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஒருவர்தலைமையில் வல்லுநர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் கொண்ட சம்பளக் கமிஷன் அமைக்கப்படும். இந்த கமிஷன் 2 ஆண்டுகளுக்குள் ஊதிய திருத்தம் தொடர்பான தனது பரிந்துரையை வழங்க வேண்டும். இந்த பரிந்துரை 2016-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். இதன்மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் பயன் அடைவார்கள். அதேசமயம் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மாத ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் 1000 ரூபாயாக வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இப்பணிகளை ஆரம்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி