வருங்கால வைப்பு நிதி - 8.5 சதவீத வட்டி இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2013

வருங்கால வைப்பு நிதி - 8.5 சதவீத வட்டி இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட, சந்தாதாரர்களின் கணக்கில் உள்ள டிபாசிட்டுக்கு, 8.5 சதவீத வட்டி வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.வருங்கால வைப்பு நிதி திட்டத்தில்,
சேர்ந்து கணக்கு வைத்துள்ளவர்களுக்கு, அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் தொகைக்கு, ஆண்டுதோறும், வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி, எவ்வளவு சதவீதம் என்பதை, இ.பி.எப்.ஓ., என்ற, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் கீழ் செயல்படும், டிரஸ்டிகளின் மத்திய போர்டு கூடி முடிவு செய்யப்படும்.இந்த வகையில், 2013 14ம் ஆண்டுக்கான, வட்டியை முடிவு செய்வதற்காக, நேற்று, டிரஸ்டிகளின் மத்திய போர்டு கூடுவதாக இருந்தது. போர்டின் தலைவரும், மத்திய தொழிலாளர் நல அமைச்சராக இருந்த சிஸ்ராம் ஓலா மறைவையடுத்து, நேற்றைய கூட்டம் ரத்து செய்யப்பட்டது.தற்போது, தொழிலாளர் துறை அமைச்சராக, ஆஸ்கர் பெர்னாண்டசுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில், இவர் தலைமையில் வாரிய கூட்டம் நடைபெறும். கடந்தாண்டு, இ.பி.எப்., டிபாசிட்டுக்கு, 8.5 சதவீத வட்டி அளிக்கப்பட்டது. இதுவே, 2013 14ம் ஆண்டிற்கு வழங்கப்படும் என தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி