9ம் வகுப்பு 3ம் பருவ பாட புத்தகம்: இணைய தளத்தில் பார்க்கலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2013

9ம் வகுப்பு 3ம் பருவ பாட புத்தகம்: இணைய தளத்தில் பார்க்கலாம்.


முப்பருவ முறை திட்டத்தின் கீழ் 9ம் வகுப்புக்காக அச்சிட்டுள்ள மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்காக பள்ளிக் கல்வி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தற்போது அரையாண்டுத் தேர்வுகள்
நடக்கிறது. 24ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அப்போது 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 3ம் பருவ பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக அச்சிட்டுள்ள 3ம் பருவ பாடப்புத்தகங்கள் wwww.dse.tn.gov.in, www.tnschools.gov.in ஆகிய இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

9ம் வகுப்புக்கு தமிழ் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கு முப்பருவ முறை அடிப்படையில் தனியார் அச்சகங்கள் புத்தகம் தயார் செய்ய ஒப்புதல் அளிக்கவும் பள்ளிக் கல்வி துறை முடிவு செய்துள்ளது. விரும்புவோர் அந்த புத்தகங்களின் 2 நகல்களை உறுப்பினர் செயலாளர், மாநில பொதுக்கல்வி வாரியம் மற்றும் பள்ளிக் கல்விஇணை இயக்குனர், கல்லூரி சாலை, சென்னை&6 என்ற முகவரிக்கு 27ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூல மாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும், 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு முப்பருவ பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் பாடம் நீங்கலாக இதர பாட புத்தங்களுக்கு ஒப்புதல் பெற விரும்புவோர் மல்டி கலர், ஏ4 அளவு, 80 ஜிசிஎம்ஐடெக் மேப்லித்தோ, சிடிபி பிரிண்டிங், 200 ஜிஎஸ்எம் விர்ஜின் கோட்டட் போர்டு கொண்ட ரேப்பரில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். புத்தகத்தின் விலை குறிப்பிட வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி