அரசு பள்ளிகளில் 'கனெக்டிங் கிளாஸ் ரூம்': முதல்கட்ட நடவடிக்கை துவக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2013

அரசு பள்ளிகளில் 'கனெக்டிங் கிளாஸ் ரூம்': முதல்கட்ட நடவடிக்கை துவக்கம்.


தமிழக அரசு பள்ளிகளில், கற்றலை நவீனப்படுத்தும் விதமாக, அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகளையும் ஒருங்கிணைக்கும் விதமாக, 'கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில்
, இணையதள வசதி மூலம், புராஜக்டர் மற்றும் ஆடியோ சிஸ்டம் கொண்டு, ஒரு வகுப்பறையில் நடத்தும் பாடத்தை, அனைத்து பள்ளிகளிலும், அதே பிரிவை சேர்ந்த மாணவர்கள் கவனிக்கவும், விவாதம் நடத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதில் முன்னோட்டமாக, மாவட்டத்துக்கு, ஐந்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் இதற்கான உபகரணம் வாங்கவும், வகுப்பறை அமைக்கவும், 42 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்துக்கு, ஐந்து பள்ளி வீதம், இத்திட்டம் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட்டு, அதில் உள்ள குறைபாடுகள், சிக்கல்கள் களையப்பட்டு, மேம்படுத்திய பின், அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

தற்போது, கனெக்டிங் கிளாஸ் ரூம் எப்படி அமைக்க வேண்டும்? எதன் செயல்பாடுகள் எவ்வாறு அமையும் என்பது குறித்த, பயிற்சி முகாம் ஏற்பாடு செயப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆங்கிலத்திறன், கம்ப்யூட்டர் திறன் படைத்த ஆசிரியர் ஆகியோருக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, நாமக்கல் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு, கோவை, ராஜாவீதி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், டிச., 30ம் தேதி நடக்கிறது. இப்பயிற்சி முடிந்த பின், பள்ளிகளில் கனெக்டிங் கிளாஸ் ரூம் அமைக்கப்பட்டு, செயல்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி