மாலை நேர சிறப்பு வகுப்புகளை ரத்து செய்ய கூடாது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2013

மாலை நேர சிறப்பு வகுப்புகளை ரத்து செய்ய கூடாது.


பொதுத் தேர்வுகளில் அதிக அளவு தேர்ச்சி சதவீதம் எட்ட வேண்டும் என்பதற்காக மாலை நேர சிறப்பு வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஒவ்வொரு பள்ளியும் அதிக தேர்ச்சி வீதத்தை காட்ட வேண்டும் என்று ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. கடந்த 2011ல் நடந்த 10ம் வகுப்பு தேர்வில் 85.30 சதவீதமும், பிளஸ்2 தேர்வில் 85.90 சதவீதமும், 2012ல் நடந்த தேர்வில் 10ம் வகுப்பில் 86.20 சதவீதமும், பிளஸ் 2 தேர்வில் 86.70 சதவீதமும் மாணவர் தேர்ச்சி அடைந்தனர். 2 மேற்கண்ட ஆண்டுகளில் நடந்த தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற தேர்ச்சி சதவீதம் குறித்து பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதில் தென் மாவட்டங்களை விட வட மாவட்டங்களின் தேர்ச்சி வீதம் குறைவாக இருப்பது தெரியவந்தது. இதற்கு காரணம் போதிய ஆசிரியர்கள் இல்லை என்பது தெரியவந்தது. அதனால் ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் 19000 ஆசிரியர்கள் புதியதாக நியமிக்கப்பட்டனர்.

இதையடுத்து 2013 பொதுத் தேர்வில் அதிக அளவில் மாணவர்கள் முதல் 3 இடங்களை பிடித்ததுடன் தேர்ச்சிவீதமும் கணிசமாக அதிகரித்தது. இதையடுத்து 2014ம் ஆண்டு தேர்வில் அதிக தேர்ச்சி வீதம் பெற வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் தொடங்கப்பட்டன. 3.30 மணிக்கு முடியும் பள்ளிகள் மாலை 4.15 மணி வரையும், 4 மணிக்கு முடியும் பள்ளிகளில் 4.45 மணி வரையும் இந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே இரண்டாம் பருவத் தேர்வுவிடுமுறையை காரணம் காட்டி வகுப்புகளை இடையில் நிறுத்தாமல் விடுமுறை நாட்களிலும் நடத்த வேண்டும். பள்ளி நாட்களிலும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் தொடர்ந்து நடக்கும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்தெரிவித்துள்ளனர். சில தனியார் பள்ளிகள் இரவு நேர வகுப்புகளையும் நடத்திவருகின்றன. இதையடுத்து 2014ம் ஆண்டு தேர்வில் 2 சதவீதம் தேர்ச்சி வீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி