ஐ.ஏ.எஸ்., பதவி உயர்வு :மாநில அரசு பதவிகளில் துணை கலெக்டர் (வருவாய்த்துறை)அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளுக்கு எழுத்துத்தேர்வு கட்டாயம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2013

ஐ.ஏ.எஸ்., பதவி உயர்வு :மாநில அரசு பதவிகளில் துணை கலெக்டர் (வருவாய்த்துறை)அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளுக்கு எழுத்துத்தேர்வு கட்டாயம்.


மத்திய அரசு உத்தரவு பதவி உயர்வு மூலம் ஐ.ஏ.எஸ்., நியமனம் பெற,அதிகாரிகள்கட்டாயம் எழுத்துத் தேர்வில் பங்கேற்கவேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.யு.பி.எஸ்.சி., மூலம் போட்டித் தேர்வில்
பங்கேற்று தேர்ச்சி பெறுவோர் நேரடியாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., பதவிகளில் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் தவிர, மாநில அரசு பதவிகளில் துணை கலெக்டர் (வருவாய்த்துறை)அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளுக்கு, பணிமூப்பு, ஆண்டு ரகசிய அறிக்கை அடிப்படையில் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., (வனத்துறை) பதவிகள் அளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான (2013) நியமனம் முதல், மாநில அதிகாரிகளும் எழுத்துத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என, மத்திய அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை,அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதன்படி இவர்கள்முதலில் எழுத்துத் தேர்வை (300 மதிப்பெண்கள்) எழுத வேண்டும். இதில் முதல்தாள் கூர்மைத் தேர்வு (டெஸ்ட்ஆப் ரீசனிங்), இரண்டாம் தாள் பொதுஅறிவு மற்றும்மாநிலங்கள் பற்றியதாக இருக்கும். அடுத்து பணிமூப்புக்கு 250 மதிப்பெண்கள்வழங்கப்படும். இதில் 8 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஒவ்வொரு ஆண்டுக்கும் 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஜனவரி 1ல் 54 வயது பூர்த்தி அடைவது வரையுள்ள ஆண்டுகள்தான் கணக்கிடப்படும். ஆண்டு ரகசிய அறிக்கைக்கு 250 மதிப்பெண்வழங்கப்படும். இதில் பணியில் உள்ள ஆண்டின் கடைசி 5ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, ஒவ்வொரு ஆண்டுக்கும் 50 மதிப்பெண்கள் வரை வழங்கப்படும்.

அடுத்து நேர்முகத் தேர்வு நடைபெறும். இதில்சம்பந்தப்பட்ட துறை, மாநிலங்கள், தேசியம், சர்வதேச பிரச்னைகள் குறித்து கேள்வி வரும். தலைமைப்பண்பு,சமயோசித அறிவும் சோதனையிடப்படும். இதற்கு 200மதிப்பெண்கள் வழங்கப்படும்.இத்தேர்வு முறையில் வருவாய்த்துறை தவிர்த்து ஊரக வளர்ச்சித்துறை,வணிகவரி, கல்வி, கருவூலம், மருத்துவம் போன்ற பிறதுறைகளில்இருந்து வரும் அதிகாரிகள், பணிமூப்புக்குப் பதிலாக, கட்டுரை வினாக்கள் கொண்ட தேர்வை எழுத வேண்டும். இதற்கு 250 மதிப்பெண்கள் உண்டு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி