எம்.பில், பி.எச்டி., படிப்புக்கு இக்னோ அழைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2013

எம்.பில், பி.எச்டி., படிப்புக்கு இக்னோ அழைப்பு.




இந்திராகாந்தி தேசிய நிறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2014ம் கல்வியாண்டில் ஜூலை மாதத்தில் சேர்க்கை பெற அழைப்பு விடுத்துள்ளது. எம்.பில்,
(எஜூகேஷன், எகனாமிக்ஸ, சோசியலாஜி, அரசியல்அறிவியல்)பி.எச்டி., (மெக்கானிக்கல், வராலாறு, பொருளாதாரம், சோசியாலஜி, நூலக மற்றும் தொழில்நுட்ப அறிவியல், அந்திரோபாலஜி, அரசியல் அறிவியல், பைன் ஆர்ட்ஸ்) உள்ளிட்ட பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பிப்.,23ம் தேதி நாடு முழுவதும் உள்ள மையங்களில் தேர்வுகள் நடத்தப்படும். விண்ணப்பிக்கத் தேவையான தகுதி, தேர்வு முறை குறித்த விவரங்களுக்கு கையேட்டில் தெரிந்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு The Director, Research Unit, Block-6, Room -18, IGNOU, Maidan Garhi, New Delhi - 110068. என்ற முகவரியின் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி