தொடக்க வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தொடர ஆசிரியர்கள் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2013

தொடக்க வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தொடர ஆசிரியர்கள் கோரிக்கை.


தொடக்க வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தொடர வேண்டும் என்று, தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு
ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் அமைப்பின் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பொதுச் செயலாளர் செ.முத்துச்சாமி தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.

இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி தொடக்கக் கல்வியில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தொடர வேண்டும்.6-ஆவது ஊதியக் குழு பரிந்துரையின்படி, மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கு இணையாக தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கும் 2006 ஜனவரி 1 முதல் வழங்க வேண்டும். தவிர, 6-ஆவது ஊதியக் குழுவில் தேர்வுநிலை, சிறப்பு நிலைப் பிரிவுகளுக்கு தனியாக ஊதிய விகிதம், தர ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத்தை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்.கல்வித் துறையில் அரசாணைகளை அரசு நிர்வாகங்கள் அமலாக்காமல் நிறுத்தி வைத்து மக்கள் அரசுக்கு எதிராகச் செயல்படுவதை தடுக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீதிமன்ற உத்தரவுகளையும் உடனடியாக அமல்படுத்த வேண்டும். நாள்தோறும் புள்ளி விவரங்கள் கேட்டும், வருவாய்த் துறை உள்ளிட்ட இதர துறைகளில் இருந்து சான்றுகள் பெற்று வரவும் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை கைவிடவும், ஆசிரியர்களை கல்விப் பணியில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி