மீண்டும் பணியமர்த்த தீர்ப்பு ஆசிரியரின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 29, 2013

மீண்டும் பணியமர்த்த தீர்ப்பு ஆசிரியரின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்.


புதுச்சேரி கல்வித்துறை வழங்கிய காரைக்கால் ஆசிரியரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து,உடனடியாக ஆசிரியரை பணியமர்த்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து,காரைக்கால் விரிவுரையாளர்கள் சங்க பொதுசெயலாளர் ரங்கநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
காரைக்கால் அக்கரைவட்டம் அரசு உயர் நிலைப்பள்ளியில் கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றிவந்த பட்டதாரி ஆசிரியர் மதியழகனின்,நீண்டநாள் விடுப்பு கடிதத்தை ஏற்காமல்,தன்னிசையாக புதுச்சேரி கல்வித்துறை மதியழகனை பணி நீக்க உத்தரவு வழங்கியது. இந்த உத்தரவால் மனம் நொந்துபோன மதியழகன்,சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் வெங்கடேஸ்வரராவ்,சோசம்மா ஆகியோர்,காரைக்கால் ஆசிரியர் மதியழகனுக்கு வழங்கப்பட்ட பணி நீக்க உத்தரவானது அதிக பட்ச தண்டனை என்று சுட்டிக்காட்டி,ஆசிரியரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்தனர். மேலும்,வருகிற4வாரங்களுக்குள் உடனடியாக மதியழகனை மீண்டும் தொடர்ச்சி மற்றும் பணி பலன்களுடன் பணியில் அமர்த்தவேண்டும் என தீர்ப்பளித்துள்ளனர். இது காரைக்கால் ஆசிரியர் மதியழகனின் பல ஆண்டு நற்பணிக்கு கிடைத்த வெற்றியாகும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி