உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய கல்வித் துறை நடவடிக்கை: கலக்கத்தில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2013

உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய கல்வித் துறை நடவடிக்கை: கலக்கத்தில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்.


தமிழகத்தில், அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய, கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பலலட்ச ரூபாய் செலவு செய்து, பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.அரசு உதவி பெறும்
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 160 மாணவர்களுக்கு, ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள் வீதம், பணியில் நியமிக்கலாம். பின், ஒவ்வொரு, 30மாணவர்களுக்கும், ஓர் ஆசிரியர் வீதம், கூடுதலாக நியமிக்கலாம்.

மாநில அளவில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், 2013 ஆக., 1ம் தேதி படி, ஆசிரியர்கள், மாணவர்கள் விகித கணக்கெடுப்பு நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கையை விட, ஆசிரியர்கள் அதிகம் உள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து, உபரி ஆசிரியர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, மாணவர்கள் மற்றும்ஆசிரியர்கள் விகிதாசார அடிப்படையில், ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய - பணிநிரவல் செய்ய, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர், ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டு உள்ளார்.

இதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில், இதற்கான, பணிநிரவல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும் என,பல லட்சம் ரூபாய் கொடுத்து, பணியில் சேர்ந்தோம். உபரி என்ற பெயரில், இடமாற்றம் செய்தால் குடும்ப சூழ்நிலை பாதிக்கும் என்றனர்.

ஒப்புதலில் சிக்கல் :

ஒரு உதவி பெறும் பள்ளியில் இருந்து,மற்றொரு பள்ளிக்கு ஆசிரியர் மாற்றப்படும் போது, சம்பந்தப்பட்ட பள்ளி சார்பில், அந்த ஆசிரியரை ஏற்றுக்கொள்கிறோம் என்ற ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பல பள்ளிகள், இதற்கான ஒப்புதலை அளிக்க முன்வரவில்லை. தற்போது இருக்கும் ஆசிரியர்கள் எண்ணிக்கையே போதும் என்ற நிலையை, பள்ளிகள் எடுக்கும்போது, பணிநிரவல் செய்வதில் சிக்கல் ஏற்படலாம், என, கல்வித் துறையினர் கூறுகின்றனர்.

5 comments:

  1. Yes TRB peoples says January CV but date not fixed endu kurinarkal ,Please neegalum call pannuga. PH TRB :044-28272455

    ReplyDelete
  2. yes friends,
    i also called trb before 4 days and today also,the same answer was given jan CV but date was not fixed, we can expect CV announcement from the first week of jaN

    ReplyDelete
  3. nanum intha no. kku call panninen. case irukku. atharkku appuramthan endru sonnarkal.

    my friend call panniyatharkku ippa processla irukku nnu sonnangalam.

    ovvorutharukku ovvoru mathiri trb la ans solranga.

    eppathan C.V?????????????????????????????

    ReplyDelete
  4. ippadiye oru question ku 4 vidha answer koduthu thane case vanthathu athaiye namaku phone la yum soldranga cv eppanu kettalum 4 option mathiri adhuvum thapana options soldranga

    ReplyDelete
  5. TET தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களை பலரும் பல்வேறு குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறார்கள் ஆனால் உண்மை என்னவென்றால், .
    முதலில் TRB சார்பில் அரசு விளம்பரம் வெளியிட வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்,
    .
    அதன் பிறகு TET இல் தேர்ச்சி பெற்றவர்கள்
    விண்ணப்பிக்க வேண்டும்.
    .
    விண்ணப்பித்தவர்களிடம் இருந்து தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்பிற்க்கான அழைப்பிதழ் கடிதம் அனுப்பிவைக்கப்படும்.
    .
    சான்றிதழ் சரிபார்த்து முடிந்தபிறகு இறுதி பட்டியலுக்காக காத்திருக்க வேண்டும்.
    .
    இறுதி பட்டியல் வந்த உடன் தங்களுக்கு உரிய பள்ளியை தேர்வு செய்ய கலந்தாய்வுக்கு சென்று பனி ஆணை வாகிய பிறகு தான் பணியில் சேர முடியும்..
    .
    ஆகையால், யாரும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டாம்.
    Thanks to TNGSSTA

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி