பள்ளிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 27, 2013

பள்ளிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம்.


வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம் நடத்தும் முறையை பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பதலைமை ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக சென்னையில் இன்று பயிற்சி தொடங்குகிறது.நெடுந்தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத இடங்கள், மலைப் பிரதேசங்கள் ஆகியபகுதிகளில்
இயங்கும் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் பயன் பெறும் வகையில் வீடியோ கான்பரசிங் மூலம் பாடம் நடத்தும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்ய உள்ளது.முதற்கட்டமாக 8 மாவட்டங்களை தேர்வு செய்து அந்த மாவட்டங்களில் சிரமமான பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வீடியோ கான்பரன்சிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில பள்ளிகளில் இது போலவீடியோ கான்பரன்சிங் திரைகள் அமைக்கப்படுகிறது. இதற்காக 7 டிவைஸ்கள்,இணைய தள வசதி, மைக்ரோ போன்கள், வெப் கேமராக்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றைஎப்படி இயக்குவது என்பது குறித்து நடுநிலை,உயர்நிலை, மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி தமிழகத்தில் நான்கு இடங்களில் நடக்க உள்ளது. முதற்கட்டமாகசென்னை சூளை மேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இன்று பயிற்சி தொடங்குகிறது.இந்தபயிற்சியில் 200 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். பயிற்சிக்கு பிறகு ஜனவரி மாதத்தில்இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடங்கள் நடத்தப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி