கூட்டுறவு வங்கிக்கு தேர்வாகியும் பணி இல்லை : அரசு இழுத்தடிப்பால் தவிக்கும் பட்டதாரிகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2013

கூட்டுறவு வங்கிக்கு தேர்வாகியும் பணி இல்லை : அரசு இழுத்தடிப்பால் தவிக்கும் பட்டதாரிகள்.


கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு நடத்தி ஓராண்டாகியும், இன்னும் வேலை தராமல் அரசு இழுத்தடிப்பதால், பட்டதாரிகள், 7,200 பேர் தவித்துவருகின்றனர்.

கடந்த ஆண்டு தமிழக கூட்டுறவு வங்கிகளில், 3,589 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, கூட்டுறவு சங்க மாநில ஆள் சேர்ப்பு நிறுவனம் வாயிலாக, 2012 டிச., 9ல், எழுத்துத் தேர்வு நடந்தது.இதில், 7,200 பேர் தேர்வாயினர். நேர்முகத்தேர்வு, மாவட்ட வாரியாக, டிச., 28ம் தேதி முதல், டிச., 31ம் தேதி வரை நடந்தது. இதில், தேர்வானவர்களுக்குஉடனடியாக பணி ஆணை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. நேர்முகத்தேர்வு முடிந்து ஓராண்டாகியும் இன்னும் வேலை கிடைக்கவில்லை.தேர்வானவரகள் பட்டியல் கூட ?வளியிடாமல், அரசு இழுத்தடித்து வருகிறது. இதனால், 7,200 பட்டதாரிகளும் பரிதவித்து வருகின்றனர்.பணிக்காக காத்திருக்கும் மணிகண்டன் கூறுகையில், முதல்வர் தனிப்பிரிவு, கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகம் என, மாறி மாறி அலைந்தும் ஒன்றும் நடக்கவில்லை. சமீபத்தில், கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டோம். பாதிக்கபட்டோரை ஒருங்கிணைத்து, தொடர் போராட்டம் நடத்த ஆலோசித்து வருகிறோம், என்றார்.வழக்கில் உள்ளது :

இதுகுறித்து கூட்டுறவு சங்க உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,அவர்களின் கோரிக்கை நியாயமானதுதான். ஆனால், ஏற்கனவே தற்காலிக பணியாளராக உள்ளோர் கோர்ட்டிற்குச் சென்றதால், உடனடியாக வேலை வழங்க முடியாத நிலை உள்ளது. சிக்கலைத்தீர்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

1 comment:

  1. Sir good noon..pse intimate m/no. Of any affected candidates for co-operative exam...my m/no. Is 9486093683

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி