நேரடியாக விண்ணப்பம் பெறக்கூடாது நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய குழு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2013

நேரடியாக விண்ணப்பம் பெறக்கூடாது நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய குழு.


தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்டம் தோறும் தேர்வுக்குழு அமைத்து வரும் 31ம் தேதிக்குள் தேர்வு செய்த ஆசிரியர் விபரங்களை அனுப்பி வைக்க பள்ளி கல்வி
இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்2013ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் தேர்வு குழு அமைக்கப்படுகிறது. தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தலைவராகவும், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், முதுகலை உதவி தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் உறுப்பினராகவும் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.இதனை போன்று உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், மேல்நிலை பள்ளி முதுநிலை தலைமை ஆசிரியர் ஆகியோரை உறுப்பினராக கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு அமைப்பது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தரவில், ‘மாவட்ட தேர்வு குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள் தூய்மையான கல்வி பணியாற்றுபவர்களாகவும், எந்தவித புகாருக்கும் ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராக வும் இருத்தல் வேண்டும்.

விருதுக்கு தகுதியானவர் பணிபுரியும் பள்ளிகளை பார்வையிட்டு அதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கி தேசிய விருதுக்கு பரிந்துரை செய்யவேண்டும்.ஒரு கல்வி மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தேர்வு செய்து டிசம்பர் 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை அலுவலர்கள் தாங்களே இனங்கண்டு உரிய கருத்துருக்களை தயார் செய்து பரிந்துரைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் இருந்து கருத்துருவை பெற்று பரிந்துரை செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 2011-12ம் கல்வியாண்டில் அல்லது அதற்கு முன்பு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே 2013ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுடையவர்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி