நேரடியாக பறக்கும் படை நியமிக்கிறது மாநில பள்ளி கல்வித்துறை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2013

நேரடியாக பறக்கும் படை நியமிக்கிறது மாநில பள்ளி கல்வித்துறை.


பிளஸ் 2 மற்றும் 10ம்வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது முதல் பல்வேறு மாற்றங்களை கல்வித்துறை செய்து வருகிறது. தற்போது, தேர்வறையை கண்காணிக்கும் மேற்பார்வையாளர் மற்றும் பறக்கும் படை
அதிகாரிகளை கல்வித்துறை உயரதிகாரிகளே நேரடியாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுவரை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் இணைந்து தேர்வறைக்குள் செல்லும் அதிகாரம் படைத்த பறக்கும்படை மற்றும் சூபர்வைசர்களை நியமிப்பர். தேர்வுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு முன், ரகசியமாக இந்த உத்தரவு அவர்களுக்கு வழங்கப்படும்.பெரும்பாலான மாவட்டங்களில் அருகில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது தங்களுக்கு தெரிந்த ஆசிரியர்கள் பறக்கும் படையில் வந்து விடுவதால், பள்ளி நிர்வாகங்கள் "குஷி"யாகி விடுகின்றன.

முறைகேடு நடக்கும் வாய்ப்பு எளிதில் உருவாகி விடுகிறது. எனவே, சில மாற்றங்களை பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் செய்ய திட்டமிட்டுள்ளது.அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுத்தேர்வு மையங்களை கண்காணிக்கக்கூடிய சூபர்வைசர், பறக்கும் படை அதிகாரிகள் விவரத்தை கல்வித்துறை இயக்குனரகம் அறிவிக்க உள்ளது. மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் தலையிட முடியாது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலைமை ஆசிரியர், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், கடந்தாண்டு பறக்கும் படையில் இருந்தவர்கள், கண்காணிப்பாளர்கள் குறித்து பட்டியல் கேட்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதிக்குள் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், கல்வித்துறைக்கு பட்டியல் அனுப்பி வைக்க வேண்டும். பட்டியலை இறுதி செய்து, மாவட்டம், தேர்வு மையம் வாரியாக, ஒவ்வொருவர் பணியாற்றும் இடங்களை கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பார். அதன்படி மட்டுமே பணியாற்ற வேண்டும்; மாற்றங்கள் செய்யக்கூடாது.உத்தரவு நகல் முதன்மை கல்வி அலுவலர் வசம் ஒப்படைக்கப்படும். அவர் பணிகளை மேலாண்மை செய்வார். கல்வித்துறை இயக்குனரகமே கண்காணிப்பாளர், சூபர்வைசரை நியமிப்பது இதுவே முதல்முறை. இவ்வாறு, அவர் கூறினார்.தேர்வறை மட்டுமின்றி, தேர்வுத்தாள் திருத்தும் மையங்களுக்கான ஆசிரியர், கண்காணிப்பாளர் மற்றும் உயரதிகாரியையும், கல்வித்துறை இயக்குனரகமே நியமிக்க உள்ளது. இதனால், எந்த ஊரில், எந்த மையத்தில் நம்மை நியமிக்கப் போகிறார்களோ என்றகலக்கத்தில் தலைமை ஆசிரியர்கள், கடந்தாண்டு தேர்வுத்தாள் திருத்திய ஆசிரியர்கள்உள்ளனர்.

1 comment:

  1. Ithuvarai ceo office la panam koduthu hesitant supervisor pottanga metric palli thalalarkal Iowa directrate la evan lancham vangina nu yosippanunga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி