திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில்1,129 பேர் தேர்ச்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2014

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில்1,129 பேர் தேர்ச்சி.


திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி போளூர் அரசு மகளிர்மேல்நிலைப் பள்ளியில்திங்கள்கிழமை தொடங்கியது.
மெட்ரிக். துறையின் இணை இயக்குநர் கார்மேகம் மேற்பார்வையில், மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் பொன்.அருண்பிரசாத், மாவட்டகல்வி அலுவலர்கள் வீ.மதியழகன் (திருவண்ணாமலை), டி.ஜோசப்ராஜ்(செய்யாறு), மெட்ரிக். பள்ளி ஆய்வாளர் சசிகலாவதி உள்ளிட்டோர்இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொன்.அருண்பிரசாத் கூறியதாவது:7 குழுக்களாகப் பிரித்து குழுவுக்கு தலா 25 பேர் என 175 பேரின்சான்றிதழ்சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. இப்பணி ஜனவரி 20 முதல் 27வரை நடைபெறும். இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற 413பேரும்,பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 716 பேரும் என1,129 பேர் பங்கேற்கவுள்ளனர் என்றார்.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி