"மேகக் கணினியம்" ஏற்படுத்த ரூ.11.39 கோடி ஒதுக்கீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2014

"மேகக் கணினியம்" ஏற்படுத்த ரூ.11.39 கோடி ஒதுக்கீடு


தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் (Tamilnadu State Data Centre), நவீன தொழில்நுட்பமான, "மேகக் கணினியம்" (cloud computing) ஏற்படுத்த, 11.39 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கம்ப்யூட்டர் துறையில் தற்போது நவீன தொழில் நுட்பமான, "மேகக் கணினியம்" பயன்படுத்தப்படுகிறது. இது, கம்ப்யூட்டர் திறனை, இணையத்தின் வாயிலாக பெறக்கூடிய, தொழில்நுட்பம்.

இதன் மூலம் கம்ப்யூட்டர் திறன்களை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து உள் கட்டுமான சேவை, மென்பொருள் தள சேவை, மென்பொருள் சேவை,ஆகியவற்றை எளிதாகப் பெற முடியும்.அரசு நிறுவனமான தமிழ்நாடு மாநிலத் தரவு மையத்தில், "மேகக் கணினியம்" ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா 11.39 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார். இப்பணி நிறைவு பெற்றால், அரசுத் துறைகள் தங்களுக்கென தனியாக கட்டமைப்பு ஏற்படுத்துவதால் ஏற்படும் காலதாமதம், கணினி திறனை குறைவாக பயன்படுத்துதல் தவிர்க்கப்படும். திறன் மேம்பாட்டுக்கான தேவை, கம்ப்யூட்டர் பயன்பாடுகளின் பேரிடர் தரவு மீட்பு, ஆகியவற்றுக்கு, "மேகக் கணினியம்" உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி