சம்பள குழு நியமனத்தை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் பிப். 12, 13ல் வேலை நிறுத்தம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2014

சம்பள குழு நியமனத்தை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் பிப். 12, 13ல் வேலை நிறுத்தம்.


சம்பளக் குழு நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் 48 மணி நேரம் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக
அறிவித்துள்ளனர். இது குறித்து மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளன பொதுச் செயலாளர் துரைபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசு ஊழியர்களுக்காக 7வது ஊதியக்குழுவை அமைப்பதாக மத்திய நிதி அமைச்சர் அறிக்கை வெளியிட்டார்.

மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படை யில் கடந்த ஆண்டு அக்டோபர் 25ம் தேதி சம்பள வரையறை குறித்து ஊழியர்கள் தரப்பு, அரசுக்கு இறுதிசெய்து அறிக்கை தந்தது.ஆனால், அரசு சம்பளக் குழுவின் உறுப்பினர் களை நியமிப்பது குறித்தோ, பஞ்சப்படியைஅடிப்படை ஊதியத்துடன் இணைப் பது குறித்தோ, இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்தோ எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதையடுத்து, கடந்த 10ம் தேதி மகா சம்மேளனத்தின் அகில இந்திய செயற்குழு டெல்லியில் கூடியது. அதில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் 48 மணி நேரம் தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்வதென முடிவு செய்யப்பட்டது. இந்த வேலை நிறுத்தத்தில் 12 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்கிறார்கள்.

தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். சென்னையில், வருமான வரி அலுவலகம், ஏஜிஎஸ் அலுவலகம், சாஸ்திரிபவன், ராஜாஜிபவன் உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட துறைகளில் பணிபுரியும், மத்திய அரசு ஊழியர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த போராட்டத்திற்குப் பிறகும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் காலவறையற்ற வேலை நிறுத்தப் போராட் டம் நடத்த எங்கள் மகா சம்மேளனம் முடிவெடுக் கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி