சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு கணிப்பொறி அறிவியல் தேர்வை வெற்றிகொள்ள... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2014

சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு கணிப்பொறி அறிவியல் தேர்வை வெற்றிகொள்ள...


சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வுகள் நெருங்கிவரும் வேளையில், மிக முக்கியத் தேர்வான கணிப்பொறி அறிவியல் தேர்வில் எப்படி அதிக மதிப்பெண்கள் பெறுவது என்ற நுட்பத்தை அறிய வேண்டியது அவசியம்.
உலகில் மொழி எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ, அதேயளவு கணிப்பொறி அறிவியலும் முக்கியம். சி.பி.எஸ்.இ.,யில் 11ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலானகணிப்பொறி அறிவியல், இத்துறையில் எதிர்காலத்தில் ஈடுபட விரும்புவோருக்கு வலுவானஅடித்தளத்தை வழங்குகிறது.CBSE, 12ம் வகுப்பு கணிப்பொறி அறிவியல் தேர்வை, சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதற்கான ஆலோசனைகள் இக்கட்டுரை வழங்குகிறது.

பாடத்திட்டம்

* Object Oriented Programming in C++ (30 marks)

* Data Structure (14 marks)

* Database Management System and SQL (8 marks)

* BOOLEAN Algebra (8 marks)

* Networking and open source software (10 marks)

மொத்தம்: 70 மதிப்பெண்கள் (தியரி)ஆலோசனைகள்

* கணிப்பொறி அறிவியல் தேர்வை வெற்றிகரமாக எழுத, புரிதல் என்பது மிகவும் முக்கியம். கேள்வித்தாளில் பெரும்பான்மையான அம்சங்கள், ப்ரோகிராமிங் தொடர்பானவைஎன்பதால், அத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற, ப்ரோகிராமிங்கை தெளிவாகப் புரிந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

* தெளிவாகப் புரிந்துகொண்ட பிறகு, முக்கியமான terms மற்றும் concept -களுக்காக, உங்களின் சொந்த குறிப்புகளைத் தயாரிக்க வேண்டும்.புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் கற்பதற்கு சிறந்தவை என்றாலும், ரிவிசன் என்று வரும்போது, உங்களின் சொந்த குறிப்புகள், உங்களுக்குத் தேவையான தகவலைப் பெற உதவும்.

* உங்களுக்கான சந்தேகங்களுக்கு, எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாகவே தீர்வு காணுங்கள். அதற்காக, உங்களின் 11ம் வகுப்பு கணிப்பொறி அறிவியல் புத்தகம் மற்றும் reference புத்தகங்களைப் பார்க்கலாம். ஆனாலும், ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்துகொள்வதே ஒரே சிறந்த வழி.

* உங்களின் பாடப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துக் கேள்விகள் மற்றும்excercise -களையும் நன்கு பயிற்சி செய்து கொள்ளவும்.

* Definition -களை ஞாபகப்படுத்திக் கொள்ள flashcards பயன்படுத்தவும்.

* Definitions மற்றும் அவற்றின் அடிப்படைப் பயன்பாடுகள் பற்றி மிகத்தெளிவாக படித்து அறிந்துகொள்ளவும். தலைப்புகளை விளக்குமாறு அடிக்கடி கேள்விகள் கேட்கப்படும்.

* ப்ரோகிராமிங் பற்றி நினைவுப்படுத்திக் கொள்ளவும், புரிந்துகொள்ளும் வகையிலும், flowcharts -களை உருவாக்கவும்.

* சாதாரண தாள்களில், ப்ரோகிராம்களை எழுதிப் பார்த்து பயிற்சி எடுக்கும்போதுகூட, முறையான இடைவெளி விட்டே எழுத வேண்டும். அப்போதுதான் தேர்வை எழுதும்போது அந்தப் பழக்கம் ஏற்படும்.

* உங்களுக்கு நேரமிருந்தால், ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக, பல்வேறான வண்ண பேனாக்கள் மற்றும் பென்சில்களைப் பயன்படுத்தவும். இதன்மூலம் காட்சி முறையில்(visual) உங்களால் நினைவில் வைக்க எளிதாக இருக்கும்.

* பிராக்டிகல் வகுப்புகளின்போது கவனம் செலுத்துவது முக்கியம். இதன்மூலம், அதிகபிராக்டிகல் மதிப்பெண்களை உங்களால் பெற முடியும். பிராக்டிகல் பகுதியில் மொத்தம் 30 மதிப்பெண்கள் அடங்கியுள்ளன. இதன்மூலம் உங்களின் சந்தேகங்களும் தீர்க்கப்படும்.

* கணினியில் ப்ரோகிராம் பயிற்சி செய்யவும். இதன்மூலம், எத்தனை ப்ரோகிராம்களை உங்களால் வெற்றிகரமாக எழுத முடியும் என்பதை கண்டறிய முடியும்.

* Boolean Algebra -க்காக நீங்கள் தயாராகிக் கொண்டிருக்கும்போது, சார்ட்டுகள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

* விபரங்கள்(details) தொடர்பாக மிகவும் கவனமாக இருக்கவும். ஏனெனில், தவறவிடப்பட்ட ஒரு சிறு punctuation கூட, உங்களின் ஒட்டுமொத்த பதிலையும் பாதித்துவிடும்.

* முந்தைய ஆண்டுகளின் கேள்வித் தாள்களை பயிற்சி செய்யவும். இதன்மூலம், பேட்டர்ன்களை புரிந்துகொள்வதோடு அல்லாமல், உங்களின் முன்தயாரிப்பை சோதித்துக் கொள்வதோடு, உங்களின் பலவீனம் என்ன என்றும் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

* நீங்கள் மாதிரியாக எழுதிப் பார்த்த பேப்பர்களை திருத்துவதற்கு தவறக்கூடாது. இதன்மூலம் உங்களால் தவறுகளை திருத்திக்கொள்ள முடியும்.

* நீங்கள் பிற்காலத்தில் கணிப்பொறி நிபுணர் அல்லது மருத்துவர் என்று என்னவாக ஆனாலும் சரி. கணினி அறிவு என்பது இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. கணினி அறிவு என்பது ஒருவருக்கு, எப்போதும் பயன்தரக்கூடிய ஒன்று என்பதை மறக்க வேண்டாம்.

* கணிப்பொறி அறிவியல் தேர்வில் சாதிக்க, தர்க்கம் மற்றும் புரிந்துணர்வைப் பயன்படுத்துதல் மிகவும் அவசியம் என்பதை உணருங்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி