தமிழ் வழியில் பி.எட். படித்து முடித்தவர்களுக்கு அதற்கான சான்றிதழை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இதற்காக ஆசிரியர்களிடம் ரூ.150 கட்டணம் பெறப்படுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2014

தமிழ் வழியில் பி.எட். படித்து முடித்தவர்களுக்கு அதற்கான சான்றிதழை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இதற்காக ஆசிரியர்களிடம் ரூ.150 கட்டணம் பெறப்படுகிறது.


தமிழ் வழியில் பி.எட். படித்து முடித்தவர்களுக்கு அதற்கான சான்றிதழை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இதற்காக ஆசிரியர்களிடம் ரூ.150கட்டணம் பெறப்படுகிறது.
தமிழ் வழியில் படித்தவர் களுக்கு அரசுப் பணிகளில்20சதவீத இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர் நியமனங்களுக்கும்இந்த இடஒதுக்கீடு பொருந்தும்.

ஆசிரியர் தேர்வுவாரியம் நடத்திய தகுதித்தேர்வின் முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது.தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு,கடந்த20-ம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து,பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின்போது,தமிழ் வழியில் படித்திருந்தால் அதற்கான சான்று உள்பட கல்விச் சான்றிதழ்களையும் சாதிச் சான்றிதழையும் காட்ட வேண்டும்.பட்டதாரி ஆசிரியர்,முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு தமிழ் வழியில் பி.எட். படித்ததற்கான சான்றிதழை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்பல்கலைக்கழகம் வழங்குகிறது.

இந்தச் சான்றிதழ் பெறுவதற்கு ரூ.150கட்டணம் வசூலிக்கப்படுகிறது.சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது,கோரிக்கை கடிதம்,ஆசிரியர் தேர்வு வாரிய அழைப்புக் கடிதம்,பதிவாளர் பெயரில் எடுக்கப்பட்ட ரூ.150-க்கான டிமாண்ட் டிராப்ட்,பட்டப் படிப்பு அல்லது முதுகலை படிப்பு சான்றிதழ்,தமிழ் வழியில் பி.எட். படித்ததற்கு கல்லூரி முதல்வர் வழங்கிய சான்று அல்லது தமிழ் வழியில் பி.எட். படித்த விவரம் குறிப்பிடப்பட்ட மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) ஆகியவற்றை கொண்டு வரவேண்டும் என ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பி.ஏ.ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழ்ப் பாடத்தில் இளங்கலை,முதுகலை படித்தவர்களும்,அதேபோல் ஆங்கில இலக்கிய இளநிலை,முதுகலை பட்ட தாரிகளும் தமிழ் வழியில் பி.எட். படித்ததற்கான சான்றிதழ் வாங்கத் தேவையில்லை என்றும் ராஜேந்திரன் கூறியிருக்கிறார்.

7 comments:

  1. Sir Nan PG candidate I also studied B.Ed in tamil Medium and I have Certificate from College principal. but i am not selected by TRB and I have no call letter, then how i can get certificate from TNTEU. they ask call letter from TRB. but I need certificate for my future exam.

    ReplyDelete
  2. Paper 2 Tamil mark 100 - wtg.71 female MBC 17.8.1980 job kidaikkuma frs. sollunga pls.

    ReplyDelete
  3. For tet no need to get from TNTEU. Tamil medium certificate from college principal is enough

    ReplyDelete
  4. U.G DEGREE AND B.ED இரண்டும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே தாள் இரண்டுக்கு தமிழ் வழி கோர முடியும் மற்றவர்களுக்கு தேவைஇல்லை. அவர்கள் தமிழ் வழி இட ஒதுக்கீடு கோர இயலாது.அதேபோல் இரண்டு சான்றிதலும் பல்கலைகழக REGISTRAR வழங்கினால் மட்டுமே ஏற்றுகொள்ளப்படுகிறது கல்லுரி முதல்வரிடம் வாங்கினால் ஏற்றுக்குகொள்ளப்படவில்லை .நான் இன்றுதான் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டு வந்தேன் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Nengal kalanthu vitu vanduvitirgal good but trb ku cl pananapa colg la tamil medium certificate vangana podum nu sonanga ....!

      Delete
  5. dear maths friends, cv attended canditates
    distric 23/1 24/1

    kanyakumari 64[b;16,g;48] -
    erode - 37[b;8,g;29]
    krusnagiri - 57 [b;17,g;40]

    other district friends pls inform that details to 9842437071. i m suresh from erode.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி