சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 1904 பேர் தேர்ச்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2014

சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 1904 பேர் தேர்ச்சி.


சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் முதல்தாள் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் 687 பேரும், இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வில்1,217 பேரும் என மொத்தம் 1,904 பேர் தேர்ச்சி பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சேலத்தில்இந்த பணிநாடுநர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் சேலம் சூரமங்கலம் புனித சூசையப்பர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குனர் சங்கர் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஈஸ்வரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ராமலிங்கம் (சேலம்), திலகம் (சங்ககிரி), மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மனோகரன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் வெங்கடாசலம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.வருகிற 27-ந் தேதி வரை அதாவது ஒருவாரம் தினமும் 10 குழுக்களாக பிரிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும் என்றும், இந்த பணிகள் முடிவடைந்ததும், மதிப்பெண்கள் மற்றும் மாநில அளவில் தயார் செய்யப்படும் இனவாரியாக சுழற்சி அடிப்படையில் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநில அளவில் பட்டியல் தயாரிப்பு

இது குறித்து சென்னை அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குனர் சங்கர் கூறுகையில், தமிழகத்தில் கடந்தாண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இன்று (நேற்று) தொடங்கியது. இந்த பணிகள் வருகிற 27-ந் தேதி வரை நடக்கிறது.சேலம் மாவட்டத்தில் தேர்வான 1,904 பேருக்கு சான்றிழ்கள் கல்வித்துறை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இடைநிலை ஆசிரியர் பணிநாடுநர்களுக்கு பிளஸ்-2 மற்றும் டிப்ளமோ கல்வி சான்றிதழ்களும், பட்டதாரிஆசிரியர் பணிநாடுநர்களுக்கு பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., சான்றிதழ்களும் சரிபார்க்கப்படும். அதன்பிறகு மாநில அளவில் இன வாரியாக சுழற்சி அடிப்படையில் இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டு காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி