இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு வழக்கில் 21ல் தீர்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 17, 2014

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு வழக்கில் 21ல் தீர்ப்பு.


இடைநிலை ஆசிரியர்கள் ஊதியத்தை சட்டப்படியான அளவீட்டில் வழங்க வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வரும்
21ம் தேதி தீர்ப்பு அளிக்கஉள்ளது.தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 129 ஆசிரியர்களில் 74 ஆயிரத்து 200 பேர் ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டப்படி இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9,300 மற்றும் ரூ.4,200 என்ற அளவீட்டில் ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இதில் இடைநிலை ஆசிரியர் ஊதியத்தை 1.6.2006ம் தேதி முதல் மாற்றி அமைக்கவேண்டும், அரசுக்கு தவறான தகவல் தந்ததற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டு இருந்தது. வழக்கு தொடர்பாக கடைசி கட்ட விசாரணை கடந்த 7ம் தேதி நடந்தது. இதில் வரும் 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

5 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி