கால முறை ஊதியம் கோரி சத்துணவுப் பணியாளர்கள் ஜன. 27-ல் ஆர்ப்பாட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2014

கால முறை ஊதியம் கோரி சத்துணவுப் பணியாளர்கள் ஜன. 27-ல் ஆர்ப்பாட்டம்


காலமுறை ஊதியம், தேசிய குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜன. 27ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைமையிடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு
சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து கூட்டமைப்பின் கெüரவத் தலைவரும், அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலருமான கு. பாலசுப்பிரமணியன் திருச்சியில் சனிக்கிழமை அளித்த பேட்டி:சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.இவர்கள் 32 அரசு ஆவணங்களைப் பராமரிப்பது உள்ளிட்ட தங்களின் பணிகளைத் தாண்டி,தடுப்பூசி போடுவது, வளரிளம் பெண்களுக்கு நாப்கின் வழங்குவது போன்ற பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.எனவே இதற்காக தனி ஊதியம் வழங்க வேண்டும். கல்வித் தகுதிக்கேற்ப அனைத்துத் துறை காலிப் பணியிடங்களிலும் நிரப்ப வேண்டும். ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு கடைசி மாத ஊதியத்தில் சரிபாதியையோ அல்லது தேசிய அளவிலான குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ. 3500 வழங்க வேண்டும்.அங்கன்வாடி முதன்மை மையங்களில் ஏற்படும் காலியிடங்களை குறுமையங்களின் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.

குறுமையங்களில் தனி ஆளாக இருந்து பணியாற்றுவதால் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும்.இவை உள்ளிட்ட கோரிக்கைளை முன்வைப்பதற்காக தமிழ்நாடு அரசு சத்துணவுப் பணியாளர் சங்கம், அங்கன்வாடி பணியாளர் சங்கம், மகளிர் ஊர்நல அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர் சங்கம், ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளர் சங்கம், ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளர் சங்கம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.கூட்டமைப்பின் சார்பில் வரும் ஜன. 27ஆம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைமையிடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தவும், தொடர்ந்து பிப். 8ஆம் தேதிசென்னையில் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் பாலசுப்பிரமணியன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி