நாடாளுமன்ற தேர்தல் வருவதால் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றினால் அவர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 17, 2014

நாடாளுமன்ற தேர்தல் வருவதால் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றினால் அவர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


நாடாளுமன்ற தேர்தல் வருவதால் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றினால் அவர்களை இடமாற்றம்
செய்ய தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் இந்த பணிகளை முடிக்கவும் வலியுறுத்தியுள்ளது.இந்தியா நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, முதல் கட்டமாக கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், தேர்தல் பணியில் ஈடுபடும் துணை கலெக்டர்களுக்கு சென்னையில் தனித் தனியாக பயிற்சி அளிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து கடந்த 10ம் தேதி தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியல் வெளியிடும் வரை வருவாய் துறையினர் இடமாற்றத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. வாக்காளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து தேர்தலுக்கான அடுத்த கட்ட முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் தொகுதி தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்களாக வருவாய் துறை, வளர்ச்சி துறை, உள்ளாட்சி துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். இவர்கள் அந்தந்த மாவட்டகலெக்டர்களின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படுவர். இந்த பணிகளுக்காக அதிகாரிகள் தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது.தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆண்டுகள்தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றினால் அவர்களை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதற்காக அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தேர்தல் அலுவலர்களாக கலெக்டர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் தான் நியமிக்கப்படுவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்குமுன்பு 3 ஆண்டுகள் பணி முடித்த கலெக்டர்கள் பலர் மாற்றப்பட்டனர்.

இதேபோல உதவி தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்படுபவர்கள் பலர் ஓரே இடத்தில் பணியாற்றலாம் என்பதால் அவர்கள் தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டவுடன் கூண்டோடு பலரும் மாற்றப்படுவர் என்று தெரிகிறது.ஜனவரி மாத இறுதிக்குள் இவர்களின் பணியிட மாற்றத்தை முடிக்குமாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே விரைவில் வருவாய் துறை, வளர்ச்சி துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவர் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி