அரசு திட்டத்தால் 510 குழந்தைகள் கேட்கும் திறன் பெற்றனர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2014

அரசு திட்டத்தால் 510 குழந்தைகள் கேட்கும் திறன் பெற்றனர்.


காது கேட்ககாத, 510 குழந்தைகளுக்கு, முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம், தக்க அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களுக்கு காது கேட்கும் திறன் உருவாகி உள்ளதாக, மாற்றுத்திறனாளிகள் துறை ஆணையர்,
மணிவாசன் தெரிவித்தார்.சென்னை ஸ்ரீராமச்சந்திரா பல்கலையில், காக்ளியர் அறுவைச் சிகிச்சை திட்டத்தின், 8ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. அதில், மணிவாசன் பேசியதாவது: தமிழகத்தில், இரண்டு லட்சத்திற்கும் மேலான குழந்தைகளுக்கு பிறவியில் செவித்திறன் பாதிப்பு உள்ளது. நெருங்கிய உறவில் திருணம் செய்வதை தவிர்க்க வேண்டும். கேட்கும் திறன் பாதித்த குழந்தைகளுக்கு ஒரு வயதிலேயே,'காக்ளியர்' அறுவைச் சிகிச்சை செய்தால், கேட்கும் திறனை முழுவதும் பெற முடியும். இந்த சிகிச்சைக்கு, எட்டு லட்சம் ரூபாய் செலவாகிறது. முதல்வரின் மருத்துவ காப்பீட்டின் கீழ், இந்த சிகிச்சை அளிக்க அனுமதித்த ஆறு மாதத்தில், 510 குழந்தைகளுக்கு, வெற்றிகரமாக இந்த சிகிச்சை தரப்பட்டு, கேட்கும் திறன் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி