தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு வரும் 8ம் தேதி துவங்குகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2014

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு வரும் 8ம் தேதி துவங்குகிறது.


லூர்:அரசு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வுகள் வரும்பிப்ரவரி 8ம் தேதி துவங்குகிறது.
இது குறித்து தமிழக தட்டச்சு பயிலக உரிமையாளர்கள் சங்க மாநில பொதுச் செயலர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் தொழில் நுட்பக் கல்வித்துறை மூலம் நடத்தப்படும் தட்டச்சு, சுருக்கெழுத்துத் தேர்வுகளின் கால அட்டவணைப்படி வரும் பிப்ரவரி 8ம் தேதி சுருக்கெழுத்து தமிழ் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வு நடக்கிறது.பிப்ரவரி 9ம் தேதி சுருக்கெழுத்து ஆங்கிலம், இளநிலை, இடைநிலை மற்றும் முதுநிலைத்தேர்வுகளும் பிப்ரவரி 15ம் தேதி தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலைத்தேர்வு 4 அணிகளாக நடக்கிறது.

16ம் தேதி இளநிலைத் தேர்வின் 5வது அணியும், தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலைத் தேர்வுகள் 3 அணிகளாகவும்நடக்கிறது.அன்றைய தினமே ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் உயர் வேகத்தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் அரசு தட்டச்சு பாடத்தேர்வுகள் 96 தேர்வு மையங்களில் நடக்கிறது.கடலூர் மாவட்டத்தில் கிருஷ்ணசாமி நினைவு பாலிடெக்னிக் கல்லூரி, சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக், நெய்வேலி விவேகானந்தா பாலிடெக்னிக், விருத்தாசலம் செராமிக் கல்லூரி ஆகிய 4 மையங்களில் நடக்கிறது.விழுப்புரம் மாவட்டத்தில் ஏழுமலை பாலிடெக்னிக், திண்டிவனம் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும், புதுச்சேரி மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மையங்களில் தட்டச்சு தேர்வுகள் நடக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி