பொதுத் தேர்வுகளுக்கான தேர்வர்களின் பட்டியலை வெளியிட்டது சி.பி.எஸ்.இ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2014

பொதுத் தேர்வுகளுக்கான தேர்வர்களின் பட்டியலை வெளியிட்டது சி.பி.எஸ்.இ


சி.பி.எஸ்.இ., வாரியத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களின் பட்டியல், அந்த வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கான அனுமதி அட்டைகள்(admit card),
ஜனவரி 27ம் தேதி, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தவறுகள் ஏற்படுவதை தவிர்க்க, CBSE, தனது இணைப்பில் உள்ள அனைத்து பள்ளிகளும், தேர்வெழுதுவோரின் பட்டியலுக்காக, விபரங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.Roll Numbers -உடன், அனைத்து தேர்வர்களுக்குமான பட்டியல் மற்றும் அனுமதி அட்டைகளை, பள்ளிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Print செய்யப்பட்ட அனுமதி அட்டைகள், CBSE வாரியத்தால் தனியாக அனுப்பப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பதிவிறக்கம் செய்ய, ஆன்லைன் சமர்ப்பித்தலின்போது பயன்படுத்திய user ID மற்றும் Password -ஐ உபயோகித்து, தேர்வர் பட்டியல் மற்றும் அனுமதி அட்டைகளை வாரியப் பள்ளிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி