பி.எப்., சந்தாதாரர்களுக்கு நிரந்தர கணக்கு எண். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2014

பி.எப்., சந்தாதாரர்களுக்கு நிரந்தர கணக்கு எண்.


தொழிலாளர் சேமநல நிதியம் (இ.பி.எப்.ஓ.,), 5 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்கு,நிரந்தர கணக்கு எண் வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், ஒருவர்,
வேறு நிறுவனத்திற்கு மாறினாலும், இ.பி.எப்., நிரந்தர கணக்கு எண்ணை, தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது, ஒரு நிறுவனத்தில் இருந்து, வேறு நிறுவனத்திற்கு மாறுபவர், தன், பழைய நிறுவனத்தின் இ.பி.எப்., கணக்கை, புதிய நிறுவனத்திற்கு, இணையதளம் வாயிலாகவே மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதி, கடந்த 2013ம் ஆண்டு, அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இருந்த போதிலும், பெரும்பாலான நிறுவனங்கள், அவற்றின் டிஜிட்டல் கையொப்பங்களை, இ.பி.எப்.ஓ.,விடம் இன்னும் பதிவு செய்யாமல் உள்ளன.இதனால், அந்நிறுவனங்களில் இருந்து, வேறு நிறுவனங்களுக்கு மாறுவோர், இ.பி.எப்., கணக்கை மாற்ற, உரிய ஆவணங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டி உள்ளது. இப்பிரச்னையை தீர்க்கும் நோக்கில் தான், இ.பி.எப்.ஓ., நிரந்தர கணக்கு எண் திட்டம் அறிமுகமாக உள்ளது. இதனால், ஒருவர் எங்கு பணியாற்றினாலும், அவரிடம் பிடித்தம் செய்யப்படும், தொகை, இ.பி.எப்.ஓ., நிரந்தர கணக்கு எண்ணின் கீழ், இணையதளம் வாயிலாகவே வரவு வைக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி