வேலைவாய்ப்பு பதிவை எளிதாக்க மாணவர்களிடம் விவரம் சேகரிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2014

வேலைவாய்ப்பு பதிவை எளிதாக்க மாணவர்களிடம் விவரம் சேகரிப்பு.


நடப்பாண்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும்போதே, வேலைவாய்ப்பு பதிவுக்காக, மாணவர்களிடம்,
ரேஷன்கார்டு விவரமும் சேகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டுக்கான, பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 3ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 26ம் தேதியும் துவங்குகிறது.கடந்த ஆண்டுகளில் இருந்ததை விட, புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள், 20 நாளில் தேர்வு முடிவு என, பல அதிரடி நடவடிக்கை, நடப்பு கல்வியாண்டில் எடுக்கப்பட்டுள்ளது. தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியரின் போட்டோவுடன் கூடிய,"நாமினல்ரோல்' தயாரிக்கப்பட்டு, ஆன் - லைன் மூலம், நேரடியாக, பள்ளியில் இருந்து, தேர்வுத் துறைக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு முதல், தேர்வு முடிவு வெளியான உடன், மாணவர்களை அலைக்கழிக்காமல் இருக்க, வேலைவாய்ப்பு பதிவு, பள்ளியிலேயே செய்யப்படுகிறது. இதில், வேலைவாய்ப்பு பதிவுக்கு, ரேஷன் கார்டு மிக முக்கிய ஆவணமாக உள்ளது. கடைசி நேரத்தில், ரேஷன் கார்டு குறித்த, குளறுபடிகளை தவிர்க்க, நடப்பாண்டில், "நாமினல்ரோல்' தயாரிக்கும் போதே, ஒவ்வொரு மாணவரின், ரேஷன் கார்டு விவரமும் சேகரிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம், தேர்வு முடிவு வெளியான உடன், வேலைவாய்ப்புக்காக, பதிவு செய்வது மிக எளிதாக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Govt is not considering employment seniority in teachers recruitment then why this process.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி