மாணவர் கல்வி உதவித்தொகை: இணையதளத்தில் விண்ணப்பிக்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2014

மாணவர் கல்வி உதவித்தொகை: இணையதளத்தில் விண்ணப்பிக்க உத்தரவு


கல்வி உதவித்தொகை வழங்குவதில் மோசடியை தடுக்க, மாணவர்களின் பெயரில், வங்கிக் கணக்கு துவங்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கல்விஉதவிக்கான விண்ணப்பத்தை,
இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

மோசடி:

ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்ளிட்ட தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு, அரசு, கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இவை, பள்ளி நிர்வாகம் மூலம், மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதில், தலைமை ஆசிரியர்கள் மூலமாக கல்வி உதவித்தொகை, பணமாகவழங்கப்பட்டதில், மோசடி நடந்தது. கடந்த, 2012ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டத்தில், போலியாக, மாணவர்களின் கையெழுத்து போட்டு, கல்வி உதவித்தொகையில், லட்சக்கணக்கான ரூபாய் மோசடி நடந்தது. அதில் சிக்கிய, 77 தலைமை ஆசிரியர்கள், இடைநீக்கம் செய்யப்பட்டனர். இது போன்ற மோசடிகளை தடுக்க, கடந்த கல்வி ஆண்டு முதல், மாணவர்களின் பெயரில் வங்கிக் கணக்கு துவங்கப்பட்டு, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.

வங்கி கணக்கு:

மாணவரின் பெயரில் வங்கி கணக்கு துவங்கப்பட்டு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டாலும், அதற்காக விண்ணப்பிப்பதில், எவ்வித முறைகேடும் நடக்கக் கூடாதுஎன்பதற்காக, அதுவும், இணைய தளத்தில் விண்ணப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் வழங்கப்படும், கல்வி உதவித்தொகைகளில், எவ்வித முறைகேடும் நடக்கக் கூடாது என்பதற்காக, மாணவரின் பெயரில் வங்கிக் கணக்கு துவங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முதல்கட்டமாக, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், உயர்கல்வி மாணவர்கள், கல்வி உதவித்தொகையை பெற, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மூலமாக, தங்களது விவரங்களை, இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம், நடப்பு நிதியாண்டில் இருந்து அமல்படுத்த, உயரதிகாரிகள், மற்ற துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்த உத்தரவிட்டுள்ளனர். அதற்காக, தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு ரகசிய குறியீடு எண் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி