கியாஸ் சிலிண்டர் பெற ஆதார் அட்டை கேட்பதற்கு இடைக்கால தடை: மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2014

கியாஸ் சிலிண்டர் பெற ஆதார் அட்டை கேட்பதற்கு இடைக்கால தடை: மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு.


விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த வக்கீல் ஆனந்தமுருகன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:–
மத்திய அரசு ஆதார் அட்டை வழங்குவதற்காக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கி வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த நிறுவனம் ரேகை, கருவிழி போன்றவைகளை அடையாளமாக கொண்டு ஆதார் அட்டைகளை வழங்கி வருகிறது. ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை பொதுமக்கள் பல்வேறு பயன்பாட்டிற்கும் அடையாள அட்டையாக பயன் படுத்தி வருகின்றனர். எனவே ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து விட்டது. இந்த தீர்ப்புபடி ஆதார் அட்டை கேட்கக்கூடாது. ஆனால் மானிய விலையில் கியாஸ் சிலிண்டர் வழங்குவதற்கு ஆதார் எண் கேட்டு சமையல் எரிவாயு நிறுவனங்கள் வற்புறுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.

ஆதார் அட்டை கேட்பது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு புறம்பானது. அதனை கேட்கும் சமையல் எரிவாயு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். ஆதார் அட்டை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என சமையல் எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோர் விசாரித்து ஆதார் அட்டை கேட்பதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மானிய விலையில் கியாஸ் சிலிண்டர் பெற ஆதார் எண் கேட்கக்கூடாது என கியாஸ் நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதிப்பதாக தீர்ப்பில் கூறி உள்ளனர். மேலும் வழக்கின் முக்கிய மனு மீதான விசாரணை 29– ந்தேதிக்கு தள்ளி வைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி