தலைமை ஆசிரியர் பதவி வேண்டும்: வணிகவியல் தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2014

தலைமை ஆசிரியர் பதவி வேண்டும்: வணிகவியல் தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் கோரிக்கை.


தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை வணிகவியல் தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சி
தென்னூர் கோவிந்தராஜ் திருமண மண்டபத்தில் நடந்தது.மாநிலத் தலைவர் ராஜராம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் செல்வராஜ், பொருளாளர்இருதயராஜ், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

பகுதி நேர தொகுப்பூதிய பணி காலத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதிய பயன்களுக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். இயல்பு நிலை தர ஊதியத்தை 5,400 ரூபாயாக கடந்த 1.1.2006ம் ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டும்.உயர்கல்வி ஊக்க ஊதியம் எம்.காம்.,க்கு ஒன்றும், அதற்கு மேல் பி.எட்., அல்லது எம்.எட்., அல்லது பி.ஹெச்டி.க்கு இரண்டாது ஊக்க ஊதியமும் வழங்க வேண்டும். வணிகவியல் பாடத்தில், இளங்கலை மற்றும் முதுகலை பயின்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு அளிக்க வேண்டும். உயர்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.பிளஸ் 2 விடைத்தாள் திருத்த ஒரு தாளுக்கு 15 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி