முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 18, 2014

முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள்...


ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய விடைகளை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இதனால், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவது தாமதமானது. இந்தநிலையில்,
நீதிமன்ற உத்தரவின்படி இரண்டாம் தாள் விடைத்தாள் அனைத்தையும், மறு மதிப்பீடு செய்து, புதிய தேர்வு முடிவை, டி.ஆர்.பி., வெளியிட்டது.ஆசிரியர் தகுதித் தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு, ஜன., 20 முதல் 27 வரை, அந்தந்த மாவட்டங்களில் நடக்கிறது.தற்போதைய சான்றிதல் சரிபார்ப்பு சென்னை உயர்நீதி மன்ற ரிட் மனுக்கள் மீது வழங்கப்படும் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என ஆசிரியர் தேர்வு வாரியம்அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ..

( The provisional list and the outcome of this certificate verification exercise is subject to final orders in various writ petitions on answer keys filed before the Hon’ble High Court of Madras. -TRB)

இதற்கிடையில் முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (250 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் ஆர் சுப்பையா முன்னிலையில் (20.01.14) பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு வருகின்றன.

( WRIT PETITIONS RELATING TO AWARD THE MARK AND PERMIT THE PETITIONER'S PARTICIPATE IN THE CERTIFICATE VERIFICATION FOR THE POST OF P.G.ASSISTANT / B.T.ASSISTANT /GRADUATE ASSISTANT / SECONDARY GRADE TEACHER - YEAR 2013 - HEARD ON MONDAYTHE 20TH DAY OF JANUARY 2013 AT 2.15 P.M BY HON'BLE MR JUSTICE R.SUBBIAH )

ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே 60 க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் 10.01.14 அன்று விசாரணைக்கு வந்தபொழுது TET தேர்வினை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள்மீது நீதியரசர் நாகமுத்து ஏற்கனவே அளித்த தீர்ப்பு இம்மனுதாரர்களுக்கும் பொருந்தும். எனக்கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார் .சென்னை உயர் நீதிமன்றமும் அதனடிப்படையில் இவ்வழக்குகள் அனைத்தும் ஒரே நாளில் முடிவு செய்யுமா? அல்லது விசாரணை தொடருமா என்பது அனைவரின் எதிர்பார்பாக உள்ளது.

Thanks To,
Velan Thangavel

6 comments:

  1. final list eppo tn poduvanga

    ReplyDelete
  2. This case will be come to end on Monday.

    When is the PG final list?

    ReplyDelete
  3. trb casekku mudivea kidayathu athukkula namma lifekku than END

    ReplyDelete
  4. pg final list expection on next week

    ReplyDelete
  5. Is there any change in the PG Tamil final list?

    ReplyDelete
  6. Is there any possibility to get marks in Chennai judgement

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி