"டிரான்ஸ்பர்"க்கு பணம்; ஆசிரியர்கள் புலம்பல்-Dinamalar News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2014

"டிரான்ஸ்பர்"க்கு பணம்; ஆசிரியர்கள் புலம்பல்-Dinamalar News


''தொடக்கக் கல்வித் துறையில், இடைநிலை ஆசிரியர்கள், புலம்பி தவிக்கிறாங்க...'' என, கடைசி மேட்டருக்குள் நுழைந்தார், அந்தோணிசாமி.''விவரமா சொல்லும் வே...'' என்றார் அண்ணாச்சி.

''கடந்த, 2007-2008ம் ஆண்டில், மாநில பதிவு மூப்பு அடிப்படையில், தொலைதூர மாவட்டங்களில், 7,000 பேர் பணியில் சேர்ந்தாங்க...''இவங்களுக்கு, தமிழக அரசு, பல ஆண்டா, பணி மாறுதல் நடத்தல... சுப்ரீம் கோர்ட் வரை போனதால, அவங்களுக்கு ஆறுதலான தீர்ப்பு கிடைச்சுது...''ஆனா, அதையும் கல்வித் துறை கண்டுக்கல... இப்போ, மறைமுகமா ஒரு, 'டீலிங்' நடக்குது...

சொந்த மாவட்டத்தில், 'போஸ்டிங்' வேணும்ன்னா, 3 முதல், 4, 'லகரம்' வரை, கைமாறுது...''மதுரையில் மட்டும், இந்த, 'டீலிங்'குல, 50 போஸ்டிங் முடிஞ்சிருக்கு...'' என்று, அந்தோணிசாமி கூற, ''அப்போ, மாநிலம் முழுவதும், எத்தனை, போஸ்டிங்குன்னு கணக்கு போட்டா, தலை சுத்துது பா...'' என, 'கமென்ட்' அடித்தார் அன்வர்பாய்.

நண்பர்கள் அனைவரும் கிளம்பினர்; பெஞ்ச் அமைதியானது.

1 comment:

  1. ennamo ponga SGT transfer mattum than ungalukku theriyutha middle school B.T"s to high school transfer kooda appadi than nadakkuthu .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி