ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், எஸ்.ஏ.,(summative assessments) தேர்வில், குறைந்தபட்சம் 25% மதிப்பெண் பெற்றால்தான், அவர்கள் அடுத்த வகுப்பிற்கு தகுதிபெற முடியும்: சி.பி.எஸ்.இ. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2014

ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், எஸ்.ஏ.,(summative assessments) தேர்வில், குறைந்தபட்சம் 25% மதிப்பெண் பெற்றால்தான், அவர்கள் அடுத்த வகுப்பிற்கு தகுதிபெற முடியும்: சி.பி.எஸ்.இ.


ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், எஸ்.ஏ.,(summative assessments) தேர்வில், குறைந்தபட்சம் 25% மதிப்பெண் பெற்றால்தான், அவர்கள் அடுத்த வகுப்பிற்கு தகுதிபெற முடியும் என்ற விதியை CBSE கட்டாயமாக்கியுள்ளது.
இந்த விதி கடந்தாண்டே அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், அதன் தாக்கங்கள், SA2 தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் இந்த நேரத்தில்தான் மாணவர்களிடம் வேலைசெய்ய தொடங்கியுள்ளன. இந்த புதிய விதி அமலுக்கு வரும் முன்னதாக, ஒரு மாணவரின் மதிப்பெண் பட்டியல்(marksheet), ஒவ்வொரு பாடத்தின் இரண்டு SA தேர்வுகள் மற்றும் 4 பார்மேடிவ் மதிப்பீடுகளின் (Formative Assessment) ஆகியவற்றின் கூட்டு மதிப்பெண்கள் ஆகியவை மதிப்பெண் பட்டியலில் இடம் பெற்றிருக்கும்.இது மாறாமல் நீடித்திருக்கும் சூழலில், மாணவர்கள் தற்போதை ய நிலையில், ஒவ்வொரு SA -விலும், 60க்கு குறைந்தபட்சம் 15 மதிப்பெண்கள் பெற வேண்டும். இதன்மூலம், மாணவர்களுக்கு விளையாட்டுத்தனமான மனப்பான்மை நீங்கி, எதையும் சீரியசாக எடுத்துக் கொண்டு, முறையாக செயல்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி