அரசு பள்ளிகளில் 100 சதவீத இலக்கு ஃப்ளக்ஸ் போர்டு வைக்க அறிவுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2014

அரசு பள்ளிகளில் 100 சதவீத இலக்கு ஃப்ளக்ஸ் போர்டு வைக்க அறிவுறுத்தல்.


அரசு பள்ளிகளில், 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கான குறிக்கோள்களை,ஃப்ளக்ஸ் போர்டாக வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு,
ப்ளஸ் 2 பொதுத்தேர்வில், 90 சதவிகிதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றிருந்தனர். நடப்பு கல்வியாண்டில், அனைத்து பள்ளிகளிலும், 100 சதவீத தேர்ச்சியை இலக்காக வைத்து, பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.இதற்காக, பள்ளியில் செய்துள்ள நடவடிக்கை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்மற்றும் மாணவர்கள் பார்க்கும் வகையில், ஃப்ளக்ஸ் போர்டு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.அதில், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு பயிற்சியளித்தல், பின்தங்கிய மாணவர்களின் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்துல், பெற்றோர்களை அழைத்து படிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மாணவர்களை படிக்க வைத்தல், சமூக உணர்வுகளையும், குடும்ப சூழ்நிலைகளையும் உணர்ந்து படிக்கும்படி ஆர்வமூட்டுதல், திருப்புத்தேர்வு அனைத்தையும் பொதுத்தேர்வு போல், அமைத்தல் உள்ளிட்ட குறிக்கோள்கள் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஈஸ்வரன் கூறியதாவது:தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டங்களில், 100 சதவீத இலக்கு என பேசினால், பள்ளிக்கு போனதும் மறக்கக்கூடும். இதனால், பள்ளி வளாகத்தில்,ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தினமும் படிக்கும் வகையில், 100 சதவீத இலக்கு குறித்த ஃப்ளக்ஸ் போர்டு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவற்றில் உள்ள குறிக்கோள்களை தினமும் படிப்பதன் மூலம் ஆர்வத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி