மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்கிறது... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2014

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்கிறது...


மத்திய அரசு ஊழியருக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உடனடியாக இது குறித்து அறிவிப்பை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் படி வரும்
வெள்ளிக்கிழமை (27-02-14) அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.கடந்த செப்டம்பர் மாதம் அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் 10% அகவிலைப்படி அறிவிக்கப்பட்டால் அது 100% மாக உயரும்.ஜனவரி முதல் முன்தேதியிட்டு இந்த உயர்வு அமல் படுத்தப்படும்.

அகவிலைப்படி உயர்வால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். நாடாளுமன்றத் தேர்தல் எந்த நேரமும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப் படுவதால் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வருமுன் அகவிலைப்படி உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு என்பது வழக்கமான நடைமுறை என்பதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இதற்கு பொருந்தாது என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

1 comment:

  1. PAPER II MAJOR TAMIL WEIGHTAGE = 79 BCM ANY CHANCE FOR JOB

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி