இடைநிலை ஆசிரியர்களுக்கு, 15 ஆண்டு கழித்தே வேலை வாய்ப்பு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2014

இடைநிலை ஆசிரியர்களுக்கு, 15 ஆண்டு கழித்தே வேலை வாய்ப்பு?


''தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு, 2013 - -14 க்குள் வேலை உத்தரவாதம் கிடைக்காவிடில், குறைந்தது, 15 ஆண்டு கழித்தே வாய்ப்பு இருக்கும்'' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பட்டதாரி ஆசிரியர்கள்:

தொடக்கக் கல்வித் துறையில், 1 முதல் 5ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற அரசாணை உள்ளது. 6 முதல் 10ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கலாம் என்பதால், இவர்களுக்கான காலியிடங்களை பொறுத்து, அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கிறது. இது போன்ற நிலை, இடைநிலை ஆசிரியர்களுக்கு இல்லாததாலும், தகுதித்தேர்வு தேர்ச்சி அவசியம் என்பதாலும் ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் குறைந்து வருகிறது. அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களை கூட, நிரப்ப முடியாமல் உள்ளது. இந்நிலையில், 2012ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் மட்டும், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது, தகுதித்தேர்விற்கான, 'கட்ஆப்' தளர்வு 55 சதவீதமாக குறைந்துள்ளதால், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் என, மொத்தம்57 ஆயிரம் பேர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏற்கனவே, 27 ஆயிரம் பேருக்கு, சான்று சரிபார்த்த நிலையில், மேலும், 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் சான்று சரிபார்த்தல் நடக்க இருக்கிறது.

பணியிடம் காலி இல்லை:

இவர்களில், 80 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என, கல்வித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தாலும், அந்தளவிற்கு ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லை என்பதால், தகுதித்தேர்வில் தேறிய ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

அதிகாரி ஒருவர் கூறியதாவது:

2013- - 14ம் கல்வியாண்டில், தொடக்கக் கல்வித்துறையில் ஏராளமானோர் பணி ஓய்வு பெறுகின்றனர். இவர்களுக்கு பதில் பணி வாய்ப்பு பெறுவோர் தவிர, மற்றவர்களுக்கு கிடைக்க, பல ஆண்டுகள் ஆகிவிடும் சூழல் உள்ளது. 2013 - 14ல் பணி ஓய்வு பெறுவோருக்கு பின், அடுத்தடுத்த ஆண்டில் ஓய்வு எண்ணிக்கை மிக குறைவு. காரணம், தற்போது பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பலர் சிறு வயதினர். இவர்கள் ஓய்வு பெற 15 முதல் 20 ஆண்டுகளை கடக்க வேண்டும். இதை கணக்கிட்டு தான், சிலர் தங்களது பிள்ளைகளை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்க்க தயங்கிஉள்ளனர். பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இந்நிலை தொடர்கிறது. 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என, அரசு வெளியிட்டாலும், அதற்கான காலியிடங்கள் மிக குறைவு என, கல்வித் துறையினர் கூறுகின்றனர்.

சான்று சரிபார்த்தவர்களுக்கான பணி நியமனமும், 2014 ஜூனை தாண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

4 comments:

  1. ரொம்ப சந்தோஷம்.....தினம் ஒரு செய்திய போட்டு கிலி அடைய செய்வதுதான் உங்க வேலையா.....பணி கிடைக்க
    இன்னும் 15ஆண்டுகள் ஆகும் என்று எந்த அதிகாரி கூறினார் ....மேலும் சலுகை என்ற பெயரில் அவர்களுக்கு கொடுத்த மாதிரி கொடுத்து வெயிட்டேஜ் குறைத்துவிட்டார்கள் இதற்கு இந்த அம்மையார் சலுகை அறிவிக்காமலே இருந்திருக்கலாம்....

    ReplyDelete
  2. 82.89 eduthu pass panavinkaluku weightege 36 not ok.correct weightege 39.all canditate no feel.change weightege pananum elaina future kelkikuriyaudum.so yaravathu case to file chennai high court immediately.change tha weightege for new for all candiate to benifit k.

    ReplyDelete
  3. sir adhigari per sollunga please namma comment la kuda oruvar ADHIGARI perla varar . chairman secretary. director ena names solli podunga intha dinamalar ku dinam fake news kodupathe velai march 1 order kodupanganu nanga nambugirom election announcement ku order kodukalana vote bank decrease agum nu ellorukum theriyum

    ReplyDelete
  4. Job a illa..weight age ku enna sandai...sappaday illa enakku ilai la ottaingura kathaiya iruku

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி