15 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்ப ஐ.பி.எம்., முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2014

15 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்ப ஐ.பி.எம்., முடிவு.


பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம்., விரைவில், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 15,000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும், ஐ.பி.எம்., தகவல் தொழில்நுட்ப நிறுவனம்,சர்வதேச அளவில் பிரபலமானது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இந்நிறுவனத்தின் கிளைகள் செயல்படுகின்றன. சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்களை தயாரித்து விற்பனை செய்வதுடன் ஏராளமான நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கும் சேவையையும், இந்த நிறுவனம் செய்து வருகிறது.உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தில் நான்கு லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். சமீபகாலமாக, இந்த நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளதாக, தகவல் வெளியானது.

இந்நிலையில், சிக்கன நடவடிக்கையாக உலகின் பல்வேறு நாடுகளில் பணியாற்றும் 15,000 பேரை வேலையை விட்டு நீக்குவதென, இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் கிளைகளில் கணிசமானோரை வீட்டுக்கு அனுப்ப,இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஐ.பி.எம்., நிறுவனத்தின் சர்வதேச பணியாளர் ஒருங்கிணைப்பாளர் லீ கான்ராட், இந்த தகவலை உறுதி செய்துள்ளார். இந்த நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் உள்ளவர்களில், கணிசமானோர் முதல் கட்டமாக, அதிரடி நடவடிக்கையில் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 comments:

  1. பாவம்....
    இவங்க நிலைமை நம்மளவிட மோசமா இருக்கும்போல.....

    ReplyDelete
  2. Indha listla reservation unda? Evanavadhu vaya thorakkarana parunga...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி