2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண்ணில்5 சதவீத சலுகை கேட்டு வழக்கு தாக்கல் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு---தின தந்தி நாளேடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2014

2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண்ணில்5 சதவீத சலுகை கேட்டு வழக்கு தாக்கல் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு---தின தந்தி நாளேடு


2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு, தகுதி மதிப்பெண்ணில் 5 சதவீத சலுகை வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், புலிவளத்தை சேர்ந்தவர் பி.மகேஸ்வரி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

தேர்வில் தோல்வி

நான் பி.எஸ்சி. (வேதியியல்) மற்றும் பி.எட். பட்டங்கள் பெற்றுள்ளேன். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தகுதி தேர்வினை நடத்த உத்தரவிட்டுள்ளது.இதன் அடிப்படையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த 2012–ம் ஆண்டுமார்ச் 7–ந்தேதி தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் கலந்து கொண்டு,85 மதிப்பெண் பெற்றேன்.ஆனால், தேர்வில் 90 மதிப்பெண் (60 சதவீதம்) எடுத்தால் மட்டுமே வெற்றி என்று தமிழக அரசு தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்திருந்ததால், நான் தோல்வி அடைந்தேன்.

மதிப்பெண்ணில் சலுகை

இதன்பின்னர், 2013–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதிலும், அதே தகுதி மதிப்பெண் முறை கடை பிடிக்கப்பட்டது.இந்த நிலையில், தமிழக கல்வித்துறை செயலாளர் கடந்த பிப்ரவரி 6–ந்தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவை சேர்ந்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் 60 சதவீதம் என்ற தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத சலுகை வழங்கி, அதாவது 55 சதவீதம் (82 மதிப்பெண்) என்று தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

பாகுபாடு

இந்த சலுகை 2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார். ஆனால், 2012–ம் ஆண்டு நடந்த தகுதி தேர்வில் பங்கேற்றவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படவில்லை.அரசின் இந்த உத்தரவு, ஆசிரியர் தகுதி தேர்வுகளை எழுதியவர்கள் மத்தியில் பாகுபாடு ஏற்படுத்தும் விதமாக உள்ளது. மேலும் 2013–ம் ஆண்டு நடந்த தேர்வில் கலந்துக் கொண்டவர்களுக்கு மட்டும் சலுகை என்ற உத்தரவு நியாயமற்றது ஆகும். இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.

பதில் அளிக்க உத்தரவு

எனவே 2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும், தகுதி மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதம் செய்தார். இதையடுத்து, மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழ்நாடு கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

24 comments:

  1. 2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண்ணில்5 சதவீத சலுகை கேட்டு வழக்கு தாக்கல் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு please contact tet2012 82 -89 mark candidate for further action cell 9842366268 email saravanan01975@gmail.com

    ReplyDelete
  2. சமுக நீதி கிடைக்க வேண்டும்

    ReplyDelete
  3. Ella kuttrangalaiyum mannikkum utchapacha neethimandram Ammavin idhayam....2012 kkum 5% relaxation namakkum vaippu kidaikkum.....pormaiyodu iruppom... Friday(27th february) nalla thagaval varalaam........

    ReplyDelete
  4. can you pls tell anyhow that how to get the tamil ceritifcate for major tamil. thanks

    ReplyDelete
  5. paper 1 தேர்ச்சி பெற்று திண்டிவனம் மற்றும் அதன் சுற்று பகுதியி்ல் வசிப்பவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா ?...pls reply....

    ReplyDelete
  6. weightage 76 க்கு கீழே எடுத்த நண்பர்களே!

    5% தளர்வு வழங்கிய பிறகு தாங்கள் தான் அதிகமாக பாதிப்படைக்கின்றோம் என cv
    முடித்து 76 க்கு கீழ் உள்ளவர்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளார்கள் என்பது வேதனையான விஷயமே!

    ஆனால் இந்த செய்தி ஓரளவு உங்களின் கலக்கத்தைப் போக்கும் என நினைக்கிறேன்.

    82-89 வாங்கியவர்கள் அதிக பட்சமாக பெரும் weightage 76

    76
    இந்த மதிப்பெண்ணை 5% தளர்வினால் பெறுவோரின் எண்ணிக்கை மிக சொற்பமாகவே இருக்கும்.

    40/40 பெறுவோரின் எண்ணிக்கை அதிக பட்சமாக 100 கூட தாண்டாது.
    1000 ம் பேருக்கு ஒருவர் 40 க்கு 40 வாங்கினால் கூட 45000 பேர்களுக்கு 45 பேர்தான் வருகிறார்கள். ஏனெனில் முதலில் அவர்கள் +12 வில் 90% மதிப்பெண் அதாவது 1080 க்கு மேல் பெற்று இருக்க வேண்டும். இரண்டாவது B,ED இல் 70% மேல் பெற்று இருக்கவேண்டும்

    அதையும் தாள் 1,தாள் 2 என பிரித்து பின்பு தாள் 2 க்கு பாட வாரியாக பிரித்தால் மிக சொற்பமான எண்ணிக்கையிலே வருவார்கள். இதில் இட ஒதுக்கீடு வேறு உள்ளது.

    அதனால் 76 உங்களுக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்க போவதில்லை.

    75
    இந்த மதிப்பெண்ணை தாள் 2 பொறுத்தவரை ஒருவர் கூட பெற முடியாது.

    ஏனெனில் weightage system அந்த வகையில் உள்ளது

    எனவே 75 வினால் உங்களுக்கு துளி கூட பாதிப்பு இருக்காது.

    74
    இந்த உங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. bc யில் உள்ளவர்களுக்கே சிறிது பாதிப்பை ஏற்படுத்தும்.
    73
    இந்த மதிப்பெண்ணும் தமிழ், ஆங்கிலம்,கணக்கு போன்ற பாட பிரிவுக்குத்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

    என்னடா இவன் டி‌வி யி ல் ராசிபலன் சொல்ற மாதிரி சொல்கிறானே என்று நினைக்க வேண்டாம்.

    எனக்கு தெரிந்த கருத்து அவ்வளுவுதான்.தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  7. 2012 tet la 82-89 score panna candidates ku 5%relaxation koduthu posting la 1st priority kodukka vendum appoluthu than samooka neethi kakkapadum intha thamatha mudivinal avarkal 1 varuda seniority Elanthu irukkirarkal kalviseithi ithai arasin kavanathirku kondu sella vendum please avarkaluku neenkal than Aaruthal

    ReplyDelete
  8. ஒரு தேர்வரின் பதிவு மாவட்டம் ஒன்று தேர்வு எழுதிய மாவட்டம் ஒன்று cv பன்னும் மாவட்டம் ஒன்று கடவுளே

    ReplyDelete
  9. Trb : processla iruku.
    Wait pannunga.
    Medias : viraivil...
    edhirparkkapadugiradhu
    Amma : innum venalum 5%
    relaxation tharugiren
    Ennai pm aakividungal
    Politicians : tet application
    Vangum anaivarukum
    Velai kodikka vendum
    Adhuve samuga needhi
    Below 82 to 80: one or two mark add aga chance irrukka. Naan 81
    82 to 89: 39weight age vendum
    2012 : engalayum indha
    Velayattula sethukkanga
    Low weight age candidate s:
    Seniority or tet mark padi
    Podradhudhanga best
    Already CV completed :
    Eppa poduveenga !!!!!!
    Eppa poduveenga !!!!!!
    Eppadhan poduveenga!!!!

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. BC(Muslim) candidates 6 district details.. 82-89...
    Dist : FM + M = Total
    Karur : 3 + 0= 3
    Trichy: 5 + 1= 6
    Chennai: 4 + 2= 6
    Kovai: 12 + 2= 14
    Erode: 11+ 5= 16
    Nagai: 2+ 0= 2
    Ramnad: 21+ 1= 22
    Salem: 10+ 0= 10..

    Female: 68
    Male: 11..
    This s paper1 detail...

    ReplyDelete
  12. Trb LA CV venue list publish pannirukanga.

    ReplyDelete
  13. I am physics bc eng medium.i hv already finished cv. My weightage 76%.my doubt is 10 ,12 th standard tm medium and also even bed. but ug eng medium but written exam tamil so am i climb tamil medium preference pls reply me anyone known that

    ReplyDelete
    Replies
    1. Ug with b.ed irandum tamil mediem aga irunthal matume clime panna mudium.b.ed mark sheetla optional la tamil ena iruka vendum

      Delete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. i am passed tet 2013. Mark 86. How many members waiting in the list maths subject please inform

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி